264
கலைஞர் மு. கருணாநிதி
மன்னன் உத்திரவை நாடெங்கும் முழங்கினார்கள் பறையறை விக்கும் வீரர்கள். நாட்டு மக்கள் அது கேட்டு மெத்தக் கொதிப்படைந் தார்கள். கரிகாலனின் ஆணைக்கு எதிராகப் பேச யாருக்கும் நாவெழாவிட்டாலும் உள்ளத்திலே பெருங்கிளர்ச்சி மூண்டது. "இதற்குப் பெயர் பெருந்தன்மையா?" "இதற்குப் பெயர் இரக்கமா?" "இதற்குப் பெயர் அன்பா?" "இல்லை!" "இது ஏமாளித்தனமான வேலை!" என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டார்கள். பிறரிடம் பேச அஞ்சினார்கள். இருங்கோவேளுக்கு எதிராகச் சோழநாட்டு மக்கள் உயர்த்திய கரத்தைச் சோழவேந்தனே வெட்டி எறிந்து விட்டான் என்று அவர்கள் கருதி மனம் வெதும்பினார்கள். "இனி என்ன? நடப்பது நடக்கட்டும்" என்று அவர்கள் ஆயாசப்பட்டுக் கொண்டு தங்கள் வேலைகளைப் பார்க்கத் திரும்பினார்கள். "இருங்கோவேள் பெருந்தேவியின் முகதரிசனம் பார்ப்பது போல் வரப்போகிறான்; திடீரென மன்னர்மீது பாயப்போகிறான்; நாம் நமது கொற்றவனை இழக்கப் போகிறோம்" என்ற வேதனையை வெளியிட்ட வாறு பூம்புகார் நகரத்து மாந்தர் நடைப்பிணங்கள் போலத் திரிந்து கொண்டிருந்தார்கள். சோழ நாட்டின் பல பகுதிகளிலும் ஒலித்தது போலவே இருங்கோவேள் தங்கியிருந்த மரமாளிகைக் காட்டோரத் திலும் பறை ஒலித்தது. "வேளிர்குல அரசி பெருந்தேவி பூம்புகார் அரண்மனையில் அரசரைக் கொல்ல முயன்று இறந்து விட்டார். அவரது சவ அடக்கம் இருங்கோவேள் மன்னரின் வருகைக்காகத் தள்ளி வைக்கப்பட் டிருக்கிறது; இன்று-நாளை -நாளை மாலை வரையில் அவரை எதிர்பார்க்கிறார்கள். அவர் பூம்புகார் அரண்மனையில் நுழைந்து,