ரோமாபுரிப் பாண்டியன்
265
ரோமாபுரிப் பாண்டியன் 265 மனைவியின் முகதரிசனம் காண எந்தத் தடையுமில்லை; அவர் தன்னந். தனியாக வந்து போகச் சோணாட்டுப் படைத் தளபதி எல்லாவிதப் பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறார்." இப்படிப் பறை முழங்கிற்று. பறை முழங்கும் காட்டோரத்துப் புதர்களில் இருங்கோவேளின் வீரர்கள் ஒளிந்து கொண்டு கவனித்தவாறு இருந்தனர். பல தடவைகள் பறையின் ஒலியும், செய்தி கூறுவோன் ஒலியும் மாறி மாறி எழுந்து ஓய்ந்தன. அறிவிப்பு முடிந்து சோணாட்டு வீரர்கள் காட்டைக் கடந்து பூம்புகார்ப் பாதைக்குத் திரும்பினர். புதரில் ஒளிந்திருந்த வேளிர்குல வீரர்கள் எழுந்து நின்றனர். அவர்களின் விழிகள் நீரைப் பொழிந்தன. தங்களின் அரசியார் மறைந்த தகவல் அவர்கள் உள்ளத்தில் சம்மட்டி அடிகளாக விழுந்திருந்தன. ஒருவரோடு ஒருவர் பேச முடியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு மரமாளிகை நோக்கி நடந்தனர். அண்ணியின் சாவுச் செய்தி கேட்ட தாமரை அழுது புரண்டாள். துன்பம் படர்ந்த அவளது வாழ்வுக்குத் துணையாக இருந்த பெருந்தேவி யின் இழப்பை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அன்றாடம் பெரும் பொழுது அண்ணியைக் கவனிப் பதற்காகவே செலவழிந்தது என்றாலும், அதிலே தாமரைக்கு ஓர் ஆறுதல் இருந்தது. இப்போது அழிந்து விட்டது. வாழ்நாளில் கடைசி மூச்சை எந்தக் காரியத்திற்காகப் பயன்படுத்தத் தன் அண்ணியார் துணிந்தார்கள் என்பதை எண்ணும்போது அவளால் விம்மி அழாமல் இருக்க முடிய வில்லை. தன் கணவனின் இலட்சியம் ஈடேறினால் போதுமென்று புறப் பட்ட அந்த வீராங்கனையின் வீரத் திருவுள்ளத்திற்கு அவள் ஆயிரம் முறை வணக்கம் செலுத்தினாள். இந்தச்சோகச் செய்தியை அண்ணன் அறிந்திருக்க இயலுமோ? அண்ணன் எங்கே இருக்கிறாரோ? அவருக் குத் தெரிந்தால் என்ன பாடுபடுவார்! - என்றெல்லாம் அவள் நினைத்துக் குமுறிக் கொண்டிருந்தாள். அண்ணனின் தவறான செயல்களால் அவள் மனம் நொந்திருந்தாள் என்றாலும், அண்ணன் தன் அருமைத் துணைவியை இழந்துவிட்டான் என்கிறபோது இயற்கையாக எழுந்த இரத்தபாசம் கொடி கட்டிப் பறந்து அவளைக் கண்ணீர்க் கடலில் மிதக்க வைத்தது. இறந்த அரசனின் உடல் பகைவனின் வீட்டில் இருக்கிறது. அந்தப் பகைவன் நமக்கு அழைப்பு விடுத்திருக்கிறான், சவ அடக்கம் செய்திட! இந்த நிலைமையை அவளால் தாங்கிக்கொள்ளத்தான் இயல வில்லை. தன்னைக் கொல்வதற்குச் சதி செய்து மனைவியை அனுப்பிய