பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

269


ரோமாபுரிப் பாண்டியன் 269 செழியன் மௌனமாக இருக்கவில்லை. “எங்கே வந்தாய்! ஏன் போகிறாய் ?" என்று சற்று அதிகாரக் குரலில் கேட்டான். திரும்பிய தாமரை நின்றாள். “உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களா என்று பார்ப்பதற் குத்தான் வந்தேன்” - பதிலுரைத்தாள் தாமரை. அவள் குரலில் நடுக்கம் இருந்ததை அவனால் உணர முடிந்தது. அண்ணன் இல்லாத சமயம், செழியன், முத்துநகை இருவரும் தப்பிவிடக் கூடாதே என்ற கவலையால்தான் அவள் அவர்களைப் பார்வையிட வந்தாள். அந்தப் பொறுப்பு அப்போது அவளுக்குத்தான் இருந்தது. முத்துநகையைப் பார்க்கும்போது ஒரு கைதியைப் பார்ப்பது போன்ற உணர்ச்சியுடன்தான் பார்த்தாளே தவிர, தன் ஏமாற்றத்திற்குக் காரணமான வள் என்ற ஏக்கத்துடன் பார்க்கவில்லை. அதே மாதிரிதான் அவள் செழியனையும் பார்வையிட வந்தாள். திரும்பியும் செல்ல முயன்றாள். அதற்குள் செழியனின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. தாமரையின் முகவாட்டத்திற்கான காரணத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் செழியனுக்கு மூண்டது. அந்தப் பதிலில் ஏதாவது உண்மைகள் கிடைக்கலாம் என்று அவன் எதிர்பார்த்தான். "ஒருவேளை இருங்கோவேள் யாரிடமாவது சிக்கியிருப்பான்; கரிகால் மன்னரிடமே கூட அகப்பட்டிருக்கக் கூடும். அதனால்தான் தாமரை வருத்தமாக இருக்கிறாள் போலும்" என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டே, "முகமாற்றத்திற்கு என்ன காரணம்” என்று கேட்டான். "என் சோகத்தில் நீங்கள் ஏன் பங்கு கொள்ள வேண்டும்?" என்று அழுதுகொண்டே பதில் சொன்னாள் தாமரை. அந்த இருட்சிறையில் சகதி நிறைந்த இடத்தில் அவளை அதிக நேரம் நிற்க வைக்க அவனுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. அந்தச் சகதிக் காட்டில் தான் தவித்தது கூட அவனுக்கு ஞாபகம் வரவில்லை. அவள் சில வினாடிகள் அங்கு நின்று கஷ்டப்படுவதைப் பார்த்ததும். "தயவு செய்து சொல், என்ன காரணம்?" "நான் அனாதையாகி விட்டேன்!' "புரியவில்லை... புரியும்படி சொல்! 44 அண்ணியார் இறந்து விட்டார்கள்!' என்று கூறித் தேம்பி அழ ஆரம்பித்தாள் தாமரை.