பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

25


ரோமாபுரிப் பாண்டியன் 25 ரோம் நாட்டுத் தங்க நாணயங்கள் இந்தியா, பாகிஸ்தான் உட்பட அறுபத்தெட்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த அறுபத்தெட்டு இடங்களில் ஐம்பத்தேழு இடங்கள் விந்தியத்திற்குத் தெற்கே இருக்கின்றன என்பதைக் கேட்கும்போது ரோமுக்கும், தென்னகத்திற்கும் இருந்து வந்த பழைய தொடர்பை எண்ணி எண்ணிப் பெருமூச்செறிகிறோம் நாம். அந்த நாணயங்களில் பெரும்பாலானவை அகஸ்டஸ் காலத்தவையும், டைபீரியஸ் என்பவனின் காலத்தவையுந்தான்! நீரோ காலத்து நாணயங்கள் அவனைப் போலவே தரக் குறைவாகவும், தங்கத்துடன் வெள்ளி கலந்ததாகவும் காணப்படுகின்றன. ரோம் பாராளுமன்றத்தில் பேசிய டைபீரியஸ், வெளிநாடு களுக்கு ரோம் நாட்டுப் பணம் போவதைக் கண்டித்துப் பேசினான் என்று சரித்திரம் செப்புகிறது. கோவை மாவட்டத்திலே குவியல் குவியலாக ரோமர் நாணயங்கள் கிடைப்பதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தார்கள். கிழக்குக் கடற்கரை யிலிருந்து ரோமாபுரிக்கு மேற்குக் கடற்கரை வழியாகப் பொருள்களை அனுப்ப வேண்டுமானால் ஒன்று கன்னியாகுமரியைச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் - அல்லது கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்தித்து வழி விட்டிருக்கும் குறுக்குப் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். இன்று அதிக அளவில் அந்தப் பகுதியில் காணப்படும் நாணயக் குவியல்களுக்கு அதையும் ஒரு காரணம் காட்டுவோரும் உளர். எப்படியோ தமிழகமும், ரோமும் எல்லா வகையிலும் உறவாடியிருக்கக் கூடும் என்பதற்கான சான்றுகள் புதைபொருள் ஆராய்ச்சி மூலமும், இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றிலிருந்தும் வெகுவாகக் கிடைத்திருக் கின்றன. இந்தப் பழைய தொடர்பினை மையமாக வைத்துதான் "ரோமாபுரிப் பாண்டியனை உருவாக்கிடத் துணிவு பெற்றுள்ளேன். அகஸ்டஸ் சீசர் காலம் கி.மு. 39 முதல் கி.பி.14 வரை! கரிகாலன் காலம் கி.மு. 60 முதல் கி.மு. 10 வரை. பாண்டியன் பெருவழுதி கரிகாலனின் நண்பன் மட்டுமல்ல. ரோமுடன் நட்புக் கொண்டிருந்தவன்- தூதரை அனுப்பியவன். அகஸ்டசும் அந்தோணியும் போர்க்களத்திலே சந்தித்துத் திரும்பியிருக் கிறார்கள்! அந்தோணியின் முடிவு இன்னும் சொல்லப்படவில்லை; கிளியோ பாத்ராவின் சோக முடிவினையும் எழுதிடவில்லை! நமது கற்பனைக் கதாநாயகி எங்கிருந்து வரப்போகிறாள் என்பதும் அறிவிக்கப்படவில்லை. அவள் கற்பனைக் கதாநாயகிதானா? அல்லது சரித்திர நூலின் வரிகளில் ஒளிந்து கொண்டு இதுவரை அறிமுகமாகாத ஆரணங்கா? ரோமாபுரிப் பாண்டியன் யார்? இந்த விசித்திரமான தலைப்பு புரிய வைக்கப்போகும் பொருள் என்ன?