ரோமாபுரிப் பாண்டியன்
273
ரோமாபுரிப் பாண்டியன் 273 யில் அல்லவா? செழியன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அவள் மரமாளிகையில் தான் இயற்கை எய்திவிட்டாள் என்று! இந்தச் செய்தி யைச் செழியனிடம் அவள் எப்படி சொல்வது? சொல்லாமலேயே இருந்து விடலாம்; சொல்லித்தான் தீரவேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை. ஆனால் அவசியமில்லாத அளவுக்குச் செழியன், யாரோ எவனோ அல்லவே! இறந்து போன அரசியின் தம்பியாயிற்றே! மூச்சைப் பிடித்துக் கொண்டு விவரத்தைக் கூறிவிடத் தாமரை தயாரானாள். செழியனின் நிலைமை என்ன ஆகுமோ அந்தச் செய்தி கேட்டு, என்று அவள் கலங்கினாள். , "தங்கள் சகோதரி, அரிய பெரிய இலட்சியமொன்றை நிறைவேற்றும் முயற்சியிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். தன் அருமைக் கணவனின் நெடுநாளையக் கனவு நிறைவேற வேண்டும்; அதைத் தானே நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவர்கள் சோழனின் மாளிகைக்குள் நுழைந்தார்களாம். கரிகால் பெருவளத் தானைக் கொன்று விட்டுத் தன் கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென எழுந்த அண்ணியின் குறிக்கோள் படுதோல்வி அடைந்துவிட்டது. சோழ மன்னரைக் கொல்லும் முயற்சியில் அண்ணியார் தோல்வியுற்றதும் மனமுடைந்து இறந்து விட்டார்களாம். அண்ணியின் சவம் பூம்புகாரில்தான் இருக்கிறது." இதைக் கேட்ட செழியனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கரிகால் மன்னரைக் கொல்ல வந்த வில்லவனைக் கொன்று, அவன் இருட்சிறை யில் அடைபட்டுக் கிடக்கிறான். அவன் அக்காளோ, கரிகாலனைக் கொல்ல முயன்று பிணமாகி விட்டாள். எவ்வளவு விசித்திரமான அக்காளும் தம்பியும்! தன் அன்புக்கும் மரியாதைக்குமுரிய கரிகாலர் மீண்டும் ஓர் ஆபத்திலிருந்து தப்பிவிட்டார் எனக் கேட்டுச் செழியன் மகிழ்ந்தான். ஆனால், தன் சகோதரி, சாகும் நேரத்தில் இலட்சியம் நிறைவேறாத ஏக்கத்தோடு போய்விட்டாளேயென்று அவளுக்காக அனுதாபம் காட்டினான். தீராத நோயிலே, தீப்பட்ட புழுவெனத் துடித்துக் கொண்டிருந்த அந்த அக்காளுக்குப் பூம்புகார்க் கோட்டைக்குள்ளே புகுந்திடும் ஆற்றல் எங்கிருந்து வந்தது? புலிக்கொடிச் சோழனைக் கொன்று குவித்திடுவோம் என்ற வீராப்பு எப்படி எழுந்தது? கட்டுக்காவல்களை மீறி உள்ளே நுழைய, நோய் எப்படித்தான் இடம் கொடுத்தது? செழியன் அதிசயத்தால் கண்ணை மூடி மெய்மறந்து இருந்தான். அக்காளின் சவம், பூம்புகாரில் இருப்பதாலேயே அவன் தாமரையிடம் விடுத்த கோரிக்கை பலமற்றுப் போய் விட்டது எனக்