பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

275


ரோமாபுரிப் பாண்டியன் 275 உன்னுடனேயே வந்து உன்னுடனேயே இங்கு திரும்பு கிறேன். என்ன சொல்கிறாய்? சரிதானா?" தாமரைக்குச் செழியனின் பேச்சை மறுத்துரைக்க முடியவில்லை. அவன் சொல்லும் யோசனைப்படியே நடந்து கொள்வது என்று தீர்மானித்தாள். "என்னை ஏமாற்றுவதற்காகவே திட்டம் வகுக்கிறீர்கள் என்றால் பூம்புகார் அரண்மனையில் தாங்கள் தப்பியோட முனையும்போது என்னைக் கொன்று போட்டு விடுங்கள். இல்லாவிட்டால் என் அண்ண னுக்குப் பதில் சொல்ல நான் உயிரோடிருந்து வேதனைப்படு வேன்" என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டாள் தாமரை. 'தாமரை! என்னை நம்பு. உதவி செய்தவர்களுக்குத் துரோகம். செய்வது தமிழினத்து வழக்கமல்ல என்பது தெரிந்தும் என்னைச் சந்தேகப்படலாமா? உன்னைப் பாதுகாக்கும் வீரனாக வரும் நான், என் சகோதரியின் பிணத்தைப் பார்த்ததும் பாச உணர்ச்சி பீரிட்டுக் கிளம்பி விடாமல் என் இதயத்தையும் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அரசியின் பிரிவு கண்டு படை வீரனுக்கு ஏற்படும் வேதனையை மட்டுமே என் முகத்தில் காண்பாய்."-என்று செழியன் கூறியதும் தாமரை 'ஓ' வெனக் கதறி அழுதுவிட்டாள். பிறகு, தாமரை, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு விரைவில் பயணத்துக்கான ஏற்பாடுகளுடன் வருவதாகச் சொல்லிவிட்டு இருட்சிறையிலிருந்து வெளியேறினாள். செழியன் தாமரை போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் சிறையின் கதவுகள் மூடப்பட்டன. தாமரை, அவன் கண்களிலிருந்து மறைந்து விட்டாள். திரும்ப வருவாளா என்ற சந்தேகத்துடனே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிந்தனையில் வீழ்ந்தான். தாமரை வேகமாகத் தன் இருப்பிடம் சென்று பயணத்திற்கான உடைகளை அணிந்து கொண்டாள். தோழியொருத்தியின் துணையால் வேளிர்படை வீரன் ஒருவனின் உடைகளைக் கொண்டுவரச் சொல்லி அவைகளைக் கையில் எடுத்துக் கொண்டாள். தோழியிடம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் செழியன் அடைபட்டிருக்கும் இருட்சிறை நோக்கி நடந்தாள். "என்ன ஆனாலும் சரி, சமாளிப்போம்" என்ற துணிவு அவளைத் தள்ளியது. இடையில் ஒளித்து வைத்திருந்த கட்டாரியைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே சிறையின் அருகே சென்றாள்.