பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

கலைஞர் மு. கருணாநிதி


276 கலைஞர் மு. கருணாநிதி வாயிற்புறத்தில் காவல் நின்ற வீரனைக் கூப்பிட்டு அவன் காதில் ஏதோ ரகசியம் கூறி அவனை அனுப்பினாள். பிறகு தாமரை உள்ளே நுழைந்தாள். செழியன் தாமரையை நன்றியுணர்வுடன் நோக்கினான். வேளிர் வீரன் உடைகளைக் கொடுத்து அவனை அணிந்து கொள்ளுமாறு கூறிவிட்டு, வாயிற்புறம் வந்து நின்று கொண்டாள். செழியனும் வெகு விரைவில் வேளிர் படை வீரனைப் போல உருமாறி அவள் எதிரே வந்து நின்றான். இருவரும் சிறையை விட்டு வெளியேறினர். சிறைக் கதவை தாமரை மூடினாள். செழியன் தலை குனிந்தவாறு அருகே நின்றான். 4 "தாமரை!" என்ற முரட்டுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள். செழியனும் நடுங்கி விட்டான்.