ரோமாபுரிப் பாண்டியன்
283
ரோமாபுரிப் பாண்டியன் 283 குதிரை எழமுடியாமல், கால் ஒடிந்து போயிற்று, தாமரைக்குப் பலமான அடியேதும் இல்லை; செழியன் தவித்தான், செய்வதறியாமல்! அதற்குள் குதிரைப் படைகள் நெருங்கி வரும் ஒலிவேறு அவனைத் திடுக்கிடச் செய்தது. யோசிப்பதற்கு நேரமில்லை. தாமரையைத் தூக்கித் தன் குதிரையில் உட்கார வைத்துக் கொண்டு குதிரையைத் தட்டிவிட்டான். இருவரையும் சுமந்தவாறு அந்தக் குதிரை முன்னிலும் வேகமாகப் புறப்பட்டது. பின்னால் வரும் குதிரைப் படையின் ஒலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. இப்போது அவர்கள் தொடர்ந்து வருவதைக் கண்ணாலும் பார்க்க முடிந்தது. 'தாமரை! என்னைப் பலமாகப் பிடித்துக் கொள்! நான் இன்னும் வேகமாகப் போகப் போகிறேன்!" என்றான் செழியன். தாமரையும் அவ்வாறே செய்தாள். குதிரை, காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடிற்று. ஆபத்தான கட்டத்தைக் கடந்து விட்டால் போதுமென்று எண்ணியவனாகச் செழியன் உயிரை மறந்து குதிரையை ஓட்டிக் கொண்டிருந்தான். அதோ வந்து விட்டார்கள், படை வீரர்கள்- அய்யோ-பிடித்து விடுவார்கள் அகப்பட்டுக் கொண்டார்கள் - என்று நினைக்கும் நேரத்தில் காட்டைத் தாண்டி வெளியேறிவிட்டது செழியனின் குதிரை. தொடர்ந்து வந்த குதிரைப் பட்டாளம். காட்டைத் தாண்டுவதற்கு அஞ்சி -அதற்கு மேல் செல்வது இருங்கோவேள் மன்னரைக் காட்டிக் கொடுத்ததாக ஆகுமெனக் கருதி நின்றுவிட்டது. செழியனை மிகப் பலமாகப் பிடித்தவாறு குதிரையில் அமர்ந்திருந்த தாமரையை இனந்தெரியாத வெட்கம் துளைத்தது என்றாலும், அவள் உள்ளத்தில் மண்டிக் கிடந்த வேதனை அதனையும் மீறி நின்றது. குதிரை பூம்புகார்த் தலைநகரத்துக் கோட்டை வாயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பின்னால் தங்களை யாரும் துரத்தி வரவில்லையென்று தரிந்ததும் அவர்கள் பயணத்தின் வேகம் சற்றக் குறைந்தது. செழியன், தாமரையின் மீது மிக்க அனுதாபங்கொண்டு அவளுக்கு ஆறுதலாகப் பேச முயன்றான். "என்னால் உனக்கு வேதனைதான்! சிறையிலிருந்து என்னை மீட்டு வந்த செய்தி காட்டு மாளிகையில் பரவி விட்டது. உன் அண்ணனுக்கும் தெரிந்து விட்டால் அவ்வளவுதான். என்னை மன்னித்துக் கொள்வாயா?"