பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

கலைஞர் மு. கருணாநிதி


284 கலைஞர் மு. கருணாநிதி செழியனின் அன்பு கலந்த மொழிகள் அவளுக்கு மிக ஆதரவு தரக்கூடியனவாய் அமைந்தன. அண்ணியின் மறைவு பற்றிய சிந்தனையுடன் போட்டி போட்டுக் கொண்டு செழியனைப் பற்றிய எண்ண ரேகைகள் அவள் இதயத்தில் நெளிந்து காட்டின. முதல் தடவையாக அவள் இவனைச் சந்தித்தபோது தன்னை முத்துநகையின் ஆண் வேடத்துக்கு அடிமையாக்கிக் கொண்டிருந்தாள். அடுத்த சந்திப்பில் செழியன், தன்னை விரும்புகிறவன் என்பது மட்டுமல்ல. தனக்கு அத்தான் முறை கொண்டவன் என்ற தெளிவும் பெற்றுவிட்டாள். அந்தத் தெளிவினைத் தொடர்ந்து மனம் விட்டு எதுவும் பேச முடியாமல் புகார் நகரத்துப் பயணம் குறுக்கிட்டுவிட்டது. பயணத்தினிடையேயும் அந்தப் பேச்சுக்கு இடமேயில்லாது போயிற்று. ஆனால், இருவர் நெஞ்சத்திலும் ஏதோ ஓர் ஊமை நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பது மட்டும் உண்மை. அந்த நாடகத்துக் கதாபாத்திரங்கள் ஊமைகள் மட்டுமல்ல! நொண்டிகள், முடங்கள், குருடுகள், செவிடுகள் என்று கூடச் சொல்லலாம். பகைவனைச் சிறையிலிருந்து மீட்டு, பகைவனின் வீட்டிலிருக்கும் அண்ணியின் உருவைக் காண்பதற்குப் பகைவனின் தோளைத் தழுவி யவாறு செல்லுகிறோமே- இதைப் பற்றி அண்ணன் என்ன கருதுவார் என்று தாமரையால் நினைக்காமல் இருக்க முடியுமா? அவள் அதை அடிக்கடி நினைக்கிறாள் என்பதற்கு அடையாளமாகத் தான்போலும் அவள் கண்களிலிருந்து நீர் பெருகிக் கொண்டேயிருந்தது. பூம்புகார் நகரத்துக்குள்ளே குதிரை நுழைந்து விட்டதை இருவரும் உணர்ந்தனர். வீதியில் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்த தைச் செழியன் கவனித்தான். அந்தக் கூட்டத்திலே ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்தனர். முதியவர்களும் கவலை யுடன் நின்று கொண்டு அங்கு பேசப்படும் விஷயங்களில் முழுக் கவனத்தையும் செலுத்தினர். கூடிப் பேசுவோர் முகங்களில் தோன்றிய பரபரப்பையும் ஆத்திர உணர்ச்சியையும் செழியன் புரிந்துகொள்ளாமல் இல்லை. - நகரத்து மக்களை இப்படி ஒரு விசித்திரமான செயலில் ஈடுபடுத்தியது என்னவாக இருக்கும் என்பது தாமரைக்குத் தெரியாதா என்ன? மன்னனைக் கொல்ல முன்வந்தாள் மாதரசி அவளும் மகுடம் பறிக்கப் பட்ட எதிரியின் மனைவி! சரித்திரம் எப்போதாவது சந்திக்கின்ற அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்றவை இன்னும் நம்பத் தகாதவை களாக இருக்கின்றனவே! கொல்ல வந்த கோமகள் பிணமாகி விட்டாள். அவள் சவத்தைக் காண. சதிகள் ஆயிரம் புரிந்து கொண்டிருக் கும் மாற்றானுக்கு அழைப்பு! இவை எல்லாம் கணநேரம் தாமரையின்