பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

285


ரோமாபுரிப் பாண்டியன் 285 கருத்தில் நிழலாட்டம் போட்டு மறைந்தன. சோழ மண்டலத்தின் கொதிப்புக்குக் காரணம் சுலபத்தில் புரிந்து விட்டது அவளுக்கு. இருவரும் தனித்தனியே சிந்தனை செய்தபடியே சென்று கொண் டிருந்தனர். ஒரு மண்டபத்தினருகே நின்ற கூட்டத்தினர் சிலர் பேசிக் கொள்வதை மறைந்திருந்து கேட்கக்கூடிய வசதி செழியனுக்கு அமைந்தது. குதிரையில் இருந்தவாறே இருவரும் அவர்களின் பேச்சுக்குக் காது கொடுத்தனர். கரிகால் மன்னன், இருங்கோவேளுக்குப் பூம்புகாரில் பயமின்றி நுழைவதற்கு அனுமதி அளித்திருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்தவர்கள்தான் அவர்கள் என்பதை இருவரும் தெளிவாக அப்போது உணர்ந்து கொண்டனர். "இருங்கோவேள் தன்னந்தனியாகப் புகார் நகரத்தில் நுழைந்து கோட்டைக்குள் பிரவேசிக்கும்போது நாமே அவனைச் சிறைப்பிடித்து விட்டால் என்ன?' என்று துடிப்புள்ள ஓர் இளைஞன் முழங்கினான். . சேச்சே ! அதெல்லாம் கூடாது. போர்க்களத்திலே கூட அறங்காக்கும் உத்தமர் என்று பெயரெடுத்த நமது கரிகாலர் ஆட்சிக்கு அப்படி யெல்லாம் களங்கம் உண்டாக்கக் கூடாது. எப்போதும் எதிரிகளை அழிப்பதைவிட அவர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் நாச நினைவுகளை எல்லாம் தலைகுனியும்படி செய்து விட்டால் அதுவே பெரிய வெற்றி அதைத்தான் தமது மன்னர் பெருமான் பெரிதும் விழைகிறவர்" என ஒரு முதுபெருங்கிழவர் மெல்லிய குரலில் அறிவுரை புகன்றார். சோழப் பேரரசின் பண்பு கண்டு தாமரை தலை தாழ்த்தியவாறு அமர்ந்திருந்தாள். அவள் நிலை கண்ட செழியன், "என்ன கீழே பார்க்கிறாய்? சோழ மாதாவின் மேனி எவ்வளவு கொதிக்கிறது என்று பார்க்கிறாயா? தேவையானால் கீழேயிறங்கி எங்கள் அன்னையின் நெற்றியைத் தொட்டுப்பாரேன்! அவள் எவ்வளவு துயரத்தில் ஆழ்ந்திருக் கிறாள் என்பது உனக்கு நன்றாக விளங்கும்!" என்று சற்று பதறியவாறு கூறினான். தாமரை அவனுக்குப்பதில் கூறவில்லை. கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டு, 'கோட்டைக்குள்ளே போகலாமா?” என்று கேட்டாள். செழியனும் குதிரையை அந்த இடத்தைவிட்டுத் திருப்பினான் வழிநெடுகப் புகார் நகரத்து மக்களின் புயல் நெஞ்சத்தைக் கண்டவாறு அவர்கள் கோட்டை வாயிலை அடைந்தனர். கோட்டையில் பலமான பலமான காவல் காவல் இருப்பது கண்டு தாமரை திகைத்தாள். குதிரையைவிட்டு இறங்கிய, செழியன், கோட்டை