பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

கலைஞர் மு. கருணாநிதி


290 கலைஞர் மு. கருணாநிதி கரிகாலனின் பெரும் உள்ளத்தை மனத்துக்குள் பாராட்டியவாறு தாமரை அரசமரியாதைகளை சோகப் பெருமூச்சுடன் ஏற்றுக் கொண்டு நடந்து சென்றாள். அவளுக்குப் பின்னே செழியன் பணிவுடன் நடந்தான். இருமருங்கிலும் நின்ற வீரர்களுக்கு உள்ளத்திலே அதிருப்தி புகைந்து கொண்டிருந்தாலும் தம் காவலனின் கட்டளையைப் புறக்கணித்தல் ஆகாது என்ற கடமையுணர்ச்சி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. தாமரைக்குச் சிரம் தாழ்த்தி அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளும் வகையில் அந்த அணிவகுப்புகள் அமைந்தன. அவைகளையெல்லாம் பார்க்கும்போது தாமரைக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. வாய்விட்டுக் கதறி அழுதுவிடக் கூடாதே என்ற பயத்தில் சமாளித்துக் கொண்டு நடந்தாள். இறுதியில் அரசி பெருந்தேவியின் சவம் இருக்குமிடம் வந்து சேர்ந்தாள். தாமரையின் சோகம் அணையைப் பிளந்து கொண்டு பீறிட் டெழுந்தது. 'ஐயோ அண்ணி!" என்று கதறியவாறு அண்ணியின் உருவத்தின் மீது விழுந்து புரண்டு அழுதாள். அக்காளின் காலைக் கட்டிக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது செழியனுக்கு! அவன் என்ன செய்வான் - பரிதாபம்! தான் யார் என்று அங்கு காட்டிக் கொள்ளக்கூடாதே! அவன் கண்களில் வழிந்த நீரைக் கண்ட மற்றவர்கள் “அரசியின் பிரிவுக்காக ஒரு போர் வீரன் எவ்வளவு துக்கப்படுகிறான்! என்று தங்களுக்குள்ளாகவே நினைத்துக் கொண் டார்கள். அண்ணியின் மூடிக்கிடக்கின்ற இமைக் கதவுகளை ஊடுருவி நோக்கினாள் தாமரை! அதற்குள்ளே உறைந்து கிடக்கின்ற மௌன விழிகள் ஒரு காலத்தில் என்ன என்னவோ பேசியிருக்கின்றன! வேளிர்குடிக்கு அவள் மருமகளாக வந்த நேரத்தில் மகிழ்ச்சியை வெளியிட்டன அந்த விழிகள்! சிற்றரசர்தான் என்றாலும் இருங்கோவே ளின் சிங்க நடையையும் அங்கங்கள் ஒவ்வொன்றிலும் வீரம் விளைந்த வெற்றித் தழும்புகளையும் கண்டு பெருமிதம் காட்டின. ஆனால் காட்டின் மத்தியில் அவர்கள் வாழ்க்கை நடத்தும் காலம் வந்த போது அந்த விழிகள்தான் எப்படி வேதனையைக் கொட்டின! ஏக்கத்தைப் பிரதிபலித்த அவைகளைக் கண்டு தன் விழிகளையே மூடிக் கொண்டிருக்கிறாள் தாமரை. முத்துக்களைத் தரையில் கொட்டி தன் அத்தானுடன் ஓடிவிளை யாடுவாளே!ஓடும்போது வழுக்கி விழுவதைக் கண்டு விலாநோகச் சிரிப்பாரே மன்னர் - அதை நினைத்துக் கொண்டாளா? அல்லது தங்கத் தாலான சிங்கங்களாம் - அவற்றின் திறந்த வாயிலே காணப்படும் பற்கள் எல்லாம் வைரங்களாம். அத்தகைய கோலாகலமான சிங்காதனத்திலே -