ரோமாபுரிப் பாண்டியன்
291
ரோமாபுரிப் பாண்டியன் 291 அமர்ந்திருந்தவள் இன்று கரடுமுரடான பலகையிலே படுத்திருக்கும் சோகத்தை எண்ணி வருந்துகிறாளா? அல்லது பஞ்சு மெத்தை வேண்டாம். பட்டாடை வேண்டாம். பணிசெய்யும் ஆட்களும், அணி பூட்டும் பாவையரும் வேண்டாம், பரம்பரையின் பெயர் சொல்ல ஒரு குலக்கொடி - நாடிழந்தாலும் பரவாயில்லை; அந்தத் தாய்மைப்பாசமே என்னவென்று தெரியாது. பிள்ளைபெறும் பேற்றை இழந்து விட்டோமே - என்று வேதனைப்படுகிறாளா? கணவன் காட்டிலே திரிகிறான் களைப்போடு - ஏதேதோ நினைப்போடு திரும்புகிறான். ஓடிச் சென்று உபசரிக்க இயலாத வீட்டுக்காரியாக - நிரந்தர வியாதிக்காரியாக ஆகிவிட்டோமே - என்று மனத்திற்குள் அழுகிறாளா? பெருந்தேவியின் கண்கள் காட்டிய ஆழம் காணமுடியாத 'ஏக்க'த்திற்கு என்ன பொருள் காண்பது என்று புரியாது தவித்திருக்கிறாள் தாமரை, பலமுறை. அந்தக் கண்கள்தாம் ஒரு நாள் நள்ளிரவில் பழி தீர்க்கப்பாய்கின்ற கொடுவேங்கைப் புலியின் இரத்தக் கண்களாகவும் மாறின. "என் ராஜாவின் இலட்சியமே என் இலட்சியம்" என்று படுக்கையிலிருந்து விழுந்து எழுந்த பெருந்தேவி, "சோழனைப் பழிவாங்கும் புதிய பலம் எனக்கு வந்துவிட்டது! என் நாயகரின் இலட்சியத்தை நிறைவேற்று கிறேன்! கொண்டுவா குதிரையை!" என்று வெற்றி முழக்கமிட்டபோது அதே கண்களைக் கண்டு நடுங்கியிருக்கிறாள் தாமரை! ஆனால் -இப்படி ஆயிரம் உணர்ச்சிகளை வெளிக்காட்டிய அந்தக் காந்தக் கண்கள் இன்று மூடிக் கொண்டனவே! இப்படி எல்லாம் அவள் எண்ணித் தவித்துக் கொண்டிருந்தபோது, மன்னன் அடிமேல் அடி வைத்து, கவலையின் உருவாக அங்கு வந்து சேர்ந்தான். கரிகால் மன்னனைக் கண்ட தாமரை, அவனது காலடிகளில் வீழ்ந்து வணங்கினாள். அந்த நிகழ்ச்சி மன்னனின் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது. ளவரசியின் தோளைத் தொட்டுத் தூக்கி விட்டுக் 'கவலைகளைப் பகிர்ந்து கொள்வோம். என்னுடைய வருத்தமெல்லாம் உன் அண்ணியின் இலட்சியம் நிறைவேறவில்லையே என்பது தான்!" என்று தழுதழுத்த குரலில் கூறினான். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தாமரை விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள். உன் அண்ணனுக்காக காத்திருக்க வேண்டியதில்லையே? காரியங்களைத் தொடங்கலாமா!" என்று கேட்ட மன்னரிடம் தாமரை 'சரி'யென்று தலையசைத்த காட்சி அங்கு நின்ற அனைவரது உள்ளத்தையும் ஓர் உலுக்கு உலுக்கியது.