பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

கலைஞர் மு. கருணாநிதி


மன்னன், நேரே தன் ஆலோசனை மண்டபத்துக்குச் சென்றான். அமைச்சர் பெருமக்களும் தளபதிகளும் வரவழைக்கப்பட்டனர். பெருங்குழப்பத்துடனே ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருக்கிற அரசனுக்குத் தங்களால் ஏதேனும் ஆலோசனைகள் வழங்க முடியுமா என்ற நல்ல எண்ணத்துடன் பாண்டிய நாட்டுத் தளபதி நெடுமாறனும் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் அனுமதி பெற்று மண்டபத்திற்குள் வந்தமர்ந்தார்கள். பெருந்தேவியின் சடலத்தை அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்வதையும், இருங்கோவேளின் தங்கையை அனுமதித்ததையும் எதிர்த்து சோழ மண்டலமே பொங்கி எழுந்து விட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து, தலை நகரத்திலுள்ள மக்களனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கழுவிக் கொள்வதற்காக வெளியேறி விடப் போகிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல் கரிகாலனைக் கலக்கிவிட்டது. அந்தத் தீயெனத் தகும் செய்தியைத்தான் மன்னனிடம் ஒரு வீரன் ரகசியமாகச் சொன்னான். மந்திரிகளையும் தளபதிகளையும் விசாரித்த தில் செய்தி உண்மை என்றே உறுதிப்பட்டுவிட்டது. தலைநகரின் பல பகுதிகளைப் பார்வையிட்டு வந்த கடியலூர்ப் புலவரும் தான் கண்ட கேட்ட எதிர்ப்பு உணர்ச்சிகளை மன்னனிடம் வர்ணித்தார். இந்த நிலையை எப்படியாவது சமாளித்தே தீரவேண்டும் என்று பாண்டியத் தளபதி நெடுமாறன் கவலையுடன் கூறினான். தக்க யோசனைகளைக் கூற யாராலும் இயலவில்லை. "மக்கள் இல்லாத நாட்டுக்கு நான் எதற்காக ஒரு மன்னன்?" இந்தக் கேள்வி கரிகாலன் உள்ளத்திலிருந்து குமுறிக் கிளம்பிய போது ஆலோசனைக் கூடமே சோகத்தில் மூழ்கியது. "உருவாகி வரும் மக்களின் உணர்ச்சி பற்றி இதுவரை என்னிடம் யாரும் தெளிவாகக் கூறவில்லையே ஏன்?” என்று தளபதிகள் மீது சீறிப் பாய்ந்தான். "இந்த அளவுக்கு நிலைமை முற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை!" என்றனர் தளபதிகள். "யார் அந்தக் கோச்செங்கணான்?"