298
கலைஞர் மு. கருணாநிதி
298 கலைஞர் மு. கருணாநிதி ஆனால் மன்னன் அதை ஏற்றுக்கொண்டதாகவே காணப்படவில்லை. "வேறு எதுவும் நாம் செய் தற்கில்லை என்றே நான் கருதுகிறேன். தயவு செய்து இந்த முடிவுக்கு மன்னர் வந்துதான் தீரவேண்டும்" என்று சொன்ன நெடுமாறன் எழுந்து இங்குமங்கும் நடக்க ஆரம்பித்தான். 'அய்யோ! அது மிகப் பண்பு கெட்ட செயல். தமிழ் இனத்துக்கே இழுக்குத் தரக்கூடிய செயல்” என்று உரத்த குரலில் கூவினான் மன்னன். ஆலோசனை மண்டபத்தில் அலைமோதிக்கொண்டிருக்கும் அரச னைப் பற்றியோ அமைச்சர் பெருமக்களைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலை கொள்ளாது கோச்செங்கணான் தலைமையில் பூம்புகாரே புறப்பட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. ஏன் தலைநகரமே நகர்கிறது? வெளியேறும் மக்களின் விளக்க மென்ன? அந்த விளக்கத்தில் வேடிக்கை மட்டுமல்ல, விவரிக்க பாசமும் கலந்திருந்தது. முடியாத 'கரிகால் மன்னரைக் காப்பாற்றுவதற்காக, கரிகால் மன்னரின் கொள்கையை எதிர்ப்பது குற்றமாகாது. துரோகிகளுக்கு இடம் தரும் அளவுக்குப் போதிக்கப்படும் அறநெறியைத் தற்கொலைக்காகத் தயாரிக்கப்படும் நஞ்சுக்கு ஒப்பிடலாம். நஞ்சு தலைநகரிலே புகுந்திருக் கிறது, வேளிர்குல இளவரசியின் உருவில்! இதை உணராதிருக்கிறார் அரசர். தலைநகரமே வெளியேறுவதன் மூலம் தான் சூழ்நிலைகளால் இருண்டு விட்ட மன்னரின் கண்ணோட்டம் தெளிவு பெறும்!' - இந்த விளக்கத்தின் அடிப்படையில், அதோ தலை நகரமே நகர்கிறது! தள்ளாடித் தண்டூன்றி நடக்கவும் சக்தியற்ற முதியோர்கள் ஒரு நல்ல காரியத்துக்காகத் தங்கள் பேரிழப்பினைத் தாங்கிக் கொள்கிறோம் என்ற மன உறுதியுடன் நடந்து கொண்டிருந்தனர். வீடு-வீடு என்று வீட்டுக்குக் கடமை செய்து வாழ்ந்து கொண்டிருந்த மகளிர். தங்கள் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டு தாங்கள் வாழ்ந்த வீடுகளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே தலை நகரத்து வீதிகளிலே நடைபோட்டனர். ஒன்றும் புரியாத குழந்தைகள், இந்திரவிழா போன்று ஏதோ ஒரு விழா திடீரென வந்துவிட்டதாக நினைத்துக் கும்மாளம் போட்டவாறு பெற்றோர்கள் பின்னே ஓடிக் கொண்டிருந்தார்கள். மக்களின் முன்னே ஆழ்ந்த சிந்தனையுடன் அமைதியான நோக்குடன் கோச்செங்கணான் நடந்து சென்றான், இன்னும் பல நாழிகைக்குள் தலைநகரின் எல்லையைக் கடந்து விடுவார்கள். இந்தச் செய்தியும் கரிகாலனுக்கு எட்டி விட்டது. படுகுழியில் வீழ்ந்த யானையெனத் தவித்தது அவன் உள்ளம்.