பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

299


ரோமாபுரிப் பாண்டியன் 299 "பெருந்தேவியின் இறுதிச் சடங்கிற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. எல்லாரும் அரசரின் வருகைக்காக தான் காத்திருக்கிறார்கள்." என்ற செய்தியுடன் ஒருவன் ஓடி வந்தான். என்ன செய்ய முடியும் கரிகாலன்? ஆலோசனை மண்டபத்தில் இருந்த அனைவரும் ஒரு முகமாகக் கூறினார்கள். "மக்கள் இன்று போனால் நாளை திரும்பி வந்துதான் தீர்வார்கள். அவர்கள் எங்கே போய் இவ்வளவு சுகமாக வாழ முடியும்?' என்று! கரிகாலன் பேச முடியாமல் வாயடைத்து நின்றான். "யோசிக்காதீர்கள் மன்னா! பூம்புகார்த் திருநகரில் வாழ்ந்தவர் களுக்கு வேறு நாட்டில் வாழ்வதற்கு மனம் வருமா? வளமான நாடுகள் பல இருந்தாலும் அங்கெல்லாம் இங்கு வாழ்ந்தவர்களுக்கு ஒத்து வருமா? இவர்களுக்கு எத்தனைபேர் இடங்கொடுத்துவிடப் போகிறார்கள்? விரைவில் ஓடி வரத்தான் போகிறார்கள்! என்றார் ஓர் அமைச்சர். “ஆத்திரத்தில் முடிவுகள் செய்யக் கூடிய நேரமல்ல இது!" என்றான் மன்னன். "ஆமாம்-மன்னர் சொல்வதுதான் சரி!" என்றது ஒரு குரல். கரிகாலன் திரும்பிப் பார்த்தான். "மன்னிக்க வேண்டும்" எனப் பணிந்தவாறு உழவர் பெருந்தகை வளவன் நின்று கொண்டிருந்தான். வளவனைக் கண்ட மன்னன் திடுக்கிட்டான். "நீயா? உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் எதற்காக இங்கு வந்தாய்?" எனப் பரபரப்புடன் கேட்ட மன்னனிடம் வளவன் பணிவான குரலில், "தலைநகரில் ஏற்பட்டுள்ள குழப்பம் என் செவிக்கும் எட்டியது; மனக்கலக்கமுற்றிருக்கும் மன்னரைக் காண வேண்டும் போலிருந்தது. அதனால்தான் ஓடிவந்தேன்" என்று பதிலளித்தான். ஓர் உழவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றினான். அதற்காக உழவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியதுதான். அவனுடைய அன்புக்கு மரியாதை செலுத்த வேண்டியதுதான். அவனுடைய ஆலோசனை களைக் கூடக் காதில் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அந்த உழவன் தனக்குத் தெரிந்த யோசனைகளை ஒரு மாமன்னனிடம் தனியான இடத்தில் சொல்வதுதான் பொருத்தம். அதை விடுத்து மன்றத்தில் வந்து நின்று யோசனைகளைக் கூற முனைகிறான் என்பதைக்