பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

கலைஞர் மு. கருணாநிதி


310 கலைஞர் மு. கருணாநிதி இங்கு ஒளிந்திருக்கிறாய்? நீ மட்டும்தான் தாமரைக்குத் துணையாக வந்தாயா?" என்று கேட்டான். யாரோ ஒருவன் தன்னை உணர்ந்து கொண்டுவிட்டான் போலும் எனப் பயந்திருந்த இருங்கோவேளுக்கும் சந்தேகம் நீங்கியது. தன்னை யாரென்று கண்டுபிடிக்கவில்லை என்ற திருப்தியும் செழியனுக்கு ஏற்பட்டது. "இளவரசிதான் என்னை இங்கே விட்டுச் சென்றார்கள். தாங்கள் ஏதாவது செய்திகள் சொன்னால் கேட்டுவரச் சொன்னார்கள். அதற்காகத்தான் யார் கண்ணிலும் படாமல் இங்கே ஒளிந்திருந்தேன்" என்று திறம்பட நடித்துவிட்டான் செழியன். இருங்கோவேள் சற்று நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தான். கண்கள் மெதுவாக மூடிக் கொண்டன. நெற்றியிலே சுருக்கங்கள் விழுந்தன. ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட செழியன், என்ன புதிய ஆபத்து ஏற்படுமோ என்ற திகிலுடன் இருங்கோவேளின் இதழ் அசைவை எதிர்பார்த்திருந்தான். இருங்கோவேளின் மூளையில் மழைக்காலத்து வானில் கருமேகங் கள் வேகமாகத் திரள்வதுபோல் திட்டங்கள் உருவாயின. விழிகளை அகலத் திறந்தான். செழியனின் தோள்பட்டையைப் பிடித்து உலுக்கியவாறு “வீரனே! இன்றிரவு நடுயாமத்தில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு நீ வர வேண்டும். உன்னிடம் சில முக்கியமான செய்தியைச் சொல்ல இருக்கிறேன். அவைகளை நீ நிறைவேற்றியாக வேண்டும்." 1 என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினான். செழியனும் உள்ளுக் குள்ளே சிறிது பயந்தான். பயத்தை மறைத்துக் கொண்டு, "தாங்கள் எங்கே மன்னவா தங்கியிருக்கிறீர்கள்?" என்று வினவினான். அரண்மனைக்குள்ளே அரசனும், அமைச்சர் பெருமக்களும் அமர்ந்திடும் ஆலோசனை மண்டபம் இருக்கிறதே! அதற்கு அருகிலே தான் என் இருப்பிடம். காவலோ, கட்டுத் திட்டங்களோ எதுவுமில்லை! என் இருப்பிடத்திற்கு நீ பயமில்லாமல் வரலாம். இளவரசி தாமரையிடம் சொல்! நான் சொல்லும்போது அவள் இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டால் போதும்." -இருங்கோவேளின் பேச்சை ஆமோதிப்பதுபோல் செழியனும் தலையசைத்தான்.