312
கலைஞர் மு. கருணாநிதி
312 கலைஞர் மு. கருணாநிதி நெடுந்தூரம் சென்ற மன்னனுக்குப்பலமான சந்தேகம் ஏற்பட்டது. என்னதான் வேகமாக ஓடினாலும் தன் கண்ணில் படாத அளவுக்குப் பூம்புகார் மக்கள் இத்தனை தூரத்தைக் கடந்திருக்க முடியாது என்று தீர்மானித்துக் கொண்டு திரும்பினான். மக்கள் காட்டு வழியிலேதான் சென்றிருக்கக்கூடும் என்று யூகித்தான். அவன் யூகம் தவறானதல்ல என்று காட்டுவதுபோல் காட்டு மார்க்கத்தில் பூம்புகார் மக்கள் திரும்பியிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அந்த அடையாளங்களைத் தொடர்ந்து கரிகாலன் தன் குதிரையைத் திருப்பிவிட்டான். பூம்புகார் நகரத்தில் சரித்திரம் காணாத கொந்தளிப்பு ஏற்பட்ட நேரத்தில் - கொல்ல வந்த எதிரியின் சவத்துக்கு மரியாதை செலுத்திய கரிகால் மன்னனின் உள்ளத்தில் ஏற்பட்ட சங்கடப் புயலில் - சஞ்சலச் சூறாவளியில் வேதனை பூகம்பத்தில் சிக்கிவிட்ட நாம் ஓர் உருவத்தை மட்டும் மறந்தே போய்விட்டோம்! - சோழ பேரரசன் கரிகால் மன்னனின் மானமும் உயிரும் காப்பாற்றப் பட வேண்டும் என்பதற்காக, ஆரம்ப காலத்திலேயே ஆபத்தோடு விளையாடப் புறப்பட்டாளே அந்த முத்துநகை, இப்போது எங்கே? கடமை-திடீரென ஏற்பட்ட மக்களின் குமுறல் - இவற்றினால் ஏற்பட்ட பயங்கரமானதொரு மனப்போராட்டத்தில் அகப்பட்டுத் தவிக்கும் மன்னனுக்கு ஆறுதல் சொல்லவும் வகையற்று அவள் எங்குதான் வாடுகிறாள்? எல்லாருமே இப்போது பூம்புகார் நகரிலே கூடிவிட்டனர். எது நடைபெற முடியாது என்று கருதினார்களோ. அது நடக்கிறது! பெரும்பகை என்ற பாலம் போடாத முடியாத பள்ளத்தால் விலகி நிற்கிற கரிகாலனும், இருங்கோவேளும் ஓரிடத்தில் தான் இருக்கிறார்கள்! பழிவாங்கும் உணர்ச்சி கொண்டவனான இருங்கோவேளின் உடன் பிறந்த தங்கை தாமரையும் பூம்புகாரில்தான் இருக்கிறாள்! அவள் தயவால் சகோதரியின் சவத்தைக் காணவந்த செழியனும் அங்கு தான் இருக்கிறான். இதுவரையில் மர்மமானதொரு நாடகத்தின் கதாபாத்திர மாக இருந்து வருகிற புலவர் காரிக்கண்ணனாரும் சந்தேகத்தில் சிக்கிய வராகத் தனியறையில் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்! தமிழ்காத்த நல்லார் ஒருவர் இத்தகைய 'பட்டம்' சுமந்ததற்குக் காரணமான முத்துநகை மட்டும் பூம்புகாரில் இல்லை. அவளைச் சந்திக்க வேண்டுமாயின் குழப்பமும் கலவரமும் சூழ்ந்துள்ள பூம்புகாரைவிட்டு, அமைதியும் ஆபத்தும் ஒருங்கே சேர்ந்திருக்கும் ஆரண்யத்திற்குச் சென்று- அதன் மத்தியில் இருக்கின்ற