318
கலைஞர் மு. கருணாநிதி
'என்ன ஆயிற்று? தாமரையைக் கண்டீர்களா? அவளையும் வேளிர்குடியின் ராஜதந்திரத்தையும் ஏமாற்றிவிட்டு ஓட நினைத்த அந்தச் செழியனைப் பிடித்தீர்களா? எங்கே அவர்கள்? பின்னால் வருகிறார் களா? நீங்கள் எல்லாரும் எதற்காக முன்னே வந்து விட்டீர்கள்?" காட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு செந்தலையாரின் கிழக்குரல் கிரீச்சிட்டது! "மன்னித்துவிடுங்கள் அமைச்சரே!... மூச்சு விடவும் தடுமாறிய வீரனொருவன் இப்படி நாக்குழறப் பேச ஆரம்பித்தான். அதற்குள் செந்தலையார் இடைமறித்தார். மன்னிப்பா? அத்தகைய குற்றம் என்ன செய்து விட்டாய் வேளிர்குலத்து வீரனே? ஓகோ.. தப்பிச்சென்ற செழியனோடு போர் நடத்தினாயா? போரிலே எதிர்பாராமல் அவனைக் கொன்று விட்டாயா? அதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்கிறாயா? தேவையில்லை! இந்த நேரத்தில் எதிரிகளுக்குள்ளேயே பெரும் எத்தனான செழியனின் மரணத்தை, நான் மட்டுமல்ல, மன்னர் இருங்கோவேளே மாலைசூட்டி வரவேற்பார்!..." வீரன் அவர் பேச்சினே இடையே குறுக்கிடத்தான் முயன்றான்; முடியவில்லை; கணீரென்று ஒலித்த அந்த முதுமைக் குரல் ஓயவில்லை! "பழிக்குப் பழி!... கரிகாலன் மாளிகையிலே அரசி பெருந்தேவி யாரின் சவம்! இருங்கோவேளின் அரண்மனை யிலே செழியனின் பிணம்!... ஆகாகா! பழிக்குப் பழி!! செந்தலையாரின் இந்தக் குரலைக் கேட்டு "அய்யோ!' என்று வாய்விட்டு அலறிவிட்டாள் முத்துநகை! தனக்கு முன்னால் புறப்பட்டுவிட்டானோ செழியன் என்று கண நேரத்தில் அதிர்ந்துபோன அவளுடைய கையிலிருந்த கட்டாரி தானே கீழே விழுந்தது! அப்போது, செந்தலையார் அவசரத்தில் எழுப்பிய கண நேரத்து வெற்றிக் கோட்டையைத் தகர்த்து எறிகின்ற உண்மைச் செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தான் அந்தக் குதிரைவீரன்,