பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

கலைஞர் மு. கருணாநிதி


322 கலைஞர் மு. கருணாநிதி உங்கள் சிங்காதனத்துச் சிறப்பையெல்லாம் அபகரித்துக் கொண்ட வனை நோக்கிப் படையெடுத்துப் புறப்படுவீர்! புறப்படுவீர்!!" ஓடிவந்து கொண்டிருந்த வேளிர்குல வீரர்களின் பார்வையிலி ருந்து தப்பி ஒரு புதருக்குள் மறைந்து கொண்டாள் முத்துநகை. அவர்கள் அவளைக் கடந்து சென்றபின் மீண்டும் தன் பயணத்தைத் துவங்கினாள். அங்கே செந்தலையாரின் குரல் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. மன்னர் இருக்குமிடம் தெரியாத நேரத்தில் அவர்களைப் போர்க்களம் நோக்கி அழைப்பதற்குச் செந்தலையாரின் முழுமூச்சும் தான் தேவைப் படுகிறது! புறப்படுகிறோம்!" - வீரர்கள் முழக்கமிட்டனர். முத்துநகை தன்மேல் பட்ட விளக்கொளியைக் கண்டு திடுக்கிட்டாள். தரையோடு தரையாகப் படுத்து விட்டாள். மண்கோபுரம் ஒன்றிலிருந்து ஒளி கிளம்பியது. மரமாளிகைக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு களில் அதுவும் ஒன்று. கலங்கரை விளக்கத்தைப்போல் சுற்றிக் கொண்டே யிருக்கும் அந்த ஒளியின் உதவியால் நாற்புறமும் பார்வையிடலாம். எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக அமைக்கப்பட்ட அந்த விளக்கி லிருந்து தப்பிய முத்துநகை ஊர்ந்து கொண்டே சென்றாள். "பகை! பகை! பகை!" '"தூள்! தூள்! தூள்!' - இடி முழக்கமென வீரர்கள் எழுப்பிய இந்தக் குரல், காட்டைக் கடந்து பூம்புகார்ப் பாதையிலே தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த முத்துநகையின் செவிகளில் மெல்லியதாகத்தான் கேட்டது! பூம்புகார் சென்று அவள் என்ன செய்யப் போகிறாள்? அவளைப் பிடித்து நிறுத்தி "எங்கே ஓடுகிறாய் பெண்ணே புயல் போல?” என்று கேட்க முடியுமா? முடியவே முடியாது. அந்தப்பெண் புலியின் வேகப்பாய்ச்சலைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியும் கிடையாது! கரிகாலன் அரண்மனையிலே பெருந்தேவியின் பிணம் கிடக்க வேண்டும்; அப்போது, மன்னனோ இருங்கோவேளுக்கு அழைப்பு விடுத்துவிட்டான் நிராயுதபாணியாக வரவேண்டுமென்று! நகரம் நிச்சயம் குழப்பத்திலேதான் இருக்கும்! அந்த நிலையில் காட்டுக்கு மத்தியிலே உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப்போர் அபாயத்தை யார் எதிர்பார்க்கப் போகிறார்கள்? நிச்சயமாக எவரும் உணர முடியாது! அதைத் தெரிந்த ஒரே ஓர் உயிர் முத்துநகைதான்! அவள்தான் சோழமண்டலத்தை இந்த திடீர்த் தாக்குதலிலிருந்து காப்பாற்றியாக வேண்டும். மன்னனிடம் சென்று 'படை திரட்டுவீர்!' என்று யோசனை