ரோமாபுரிப் பாண்டியன்
325
ரோமாபுரிப் பாண்டியன் 325 தொலைவிலே கூட இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு பிறகு பேசித் தொடங்கினான்! ஒரே நாளில் காவிரிப்பூம்பட்டினத்துப் பெருமக்களின் உள்ளத்தை யெல்லாம் தன்பால் இழுத்துக் கொண்ட தன்மானப் பொலிவு கொண்ட வீரத் தமிழ்க் குரலல்லவா அது! மக்கள் கடல் அலை ஓய்ந்து அந்தக் குரலின் பக்கம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது. அவள் உரையாற்றினாள்! எந்தத் தானைத் தலைவனும் ஆற்றிட இயலாத போர் உரை: "பூம்புகார் மக்களே! நாம் நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திலேயிருந்து நாலைந்து கல் தொலைவிலே தான் நமது பகைவன் இருங்கோவேளினுடைய பாசறை இருக்கிறது. மரத்தால் மாளிகை யமைத்துக் கொண்டு யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நெஞ்சுரத் தால் சோழப் பேரரசைச் சாய்க்கப் படை திரட்டிக் கொண்டிருக்கிறான். பகையை எதிர்க்கப் படை திரட்டும் வேலை முடிந்து விட்டதைப் போல் அவனுடைய அமைச்சர் செந்தலையார் போர் முரசும் கொட்டி விட்டார். அந்தக் கிழட்டுப் புலியின் உறுமலைக் கேட்ட பிறகே நான் தலைநகருக்கு ஓடிவந்தேன். உங்களையெல்லாம் அணுகினேன். உங்களிடம் இதுவரை யில் வெளியிடாத உண்மையினையும் இப்போது வெளியிடப்போகி றேன். பூம்புகார்மீது பாய்வதற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு திடீரெனக் கிளம்பப் போகிறார்கள் இருங்கோ வேளின் வீரர்கள். நகரம் எப்படியிருக்கிறது என உளவறிய வந்திருந்த இரண்டொரு வேளிர்குல வீரர்களையும் நான் சந்தித்தேன். அவர்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அவர்களை யாரென்று புரிந்து கொண்டு, அவர்களுடைய செயலனைத்தையும் இடைவிடாது தொடர்ந்து கவனித்தேன். நாமெல்லாம் பூம்புகாரை விட்டுக் கிளம்பி யதும் அவர்கள் தாங்காத மகிழ்ச்சியுடன் குதிரைகளிலேறி மரமாளிகைக் குப் புறப்பட்டு விட்டனர். இந்நேரம் மரமாளிகையிலிருந்து படை புறப்படத் தயாராக இருக்கும்! "பூம்புகாரில் மக்களே இல்லை. மக்களின் கோபத்துக்கு மன்னன் ஆளாகிவிட்டான் என்ற மகிழ்ச்சிக்குரிய செய்திகளால் அமைச்சர் செந்தலையாரின் தோள் வீங்கிப் போயிருக்கும். இருங்கோவேளின் படை இந்த வழியாகத் தான் பூம்புகார் நோக்கிப் போகப் போகிறது. 'இவ்வளவு தெரிந்திருந்தும் எங்களையெல்லாம் இங்கே ஏன் அழைத்து வந்தாய்? என்று என்னைப் பார்த்துக் கேட்பது போலிருக்கிறது உங்களுடைய பார்வை! இருங்கோவேளின் படையைச் சோழநாட்டுப் படைவீரர்கள் எதிர்த்து முறியடித்தார்கள் என்று சொல்லும் போது ஏற்படுகிற பெருமையை விட, அந்தப் படையைப் பூம்புகார்த்