326
கலைஞர் மு. கருணாநிதி
326 கலைஞர் மு. கருணாநிதி தலைநகரத்து மக்களே எதிர்த்து விரட்டினார்கள் என்று கூறும்போது தான் அதிகப்பெருமை என்று நான் கருதுகிறேன், நீங்களும் அப்படித்தானே கருதுகிறீர்கள்? இதைக் கேட்டுவிட்டுச் சற்று அமைதியாக அவள் மக்களைப் பார்த்தாள். "ஆமாம் அதுதான் சரி!" என்று மக்கட் பெருங்கடல் முழங்கியது. முத்துநகை மீண்டும் தொடர்ந்தாள். "போர்க் கருவிகளைக் கொண்டு களம்புகத் துடித்து வரும் வேளிர் படை வீரர்களை வெறுங்கையுடன் நாங்கள் எப்படி எதிர்ப்பது என்று கேட்பீர்கள். வேளிர் வீரர்களுக்கு எதிராக வேலும், வாளும் பிடித்துப் போரிடுவது சோழ வீரத்துக்கு இழுக்கான செயலாகும். அதனால் நான் கூறுகிறேன், மறவர்குல மக்களே...! "உங்கள் பரந்த நெஞ்சங்களே பகைவரின் வேல், வாட்களைத் தாங்கும் கேடயங்களாகட்டும்! உரம் வாய்ந்த உங்கள் வீரக் கரங்களே எதிரிகளின் தலைகளை அறுத்துத் தள்ளும் போர் வாட்களாக மின்னட்டும்! 'குழந்தைகள், கிழவர்கள், உடமைகள் நீங்கலாக அனைவரும் என் ஆணைக்கு அடங்கும் விதத்தில் தனி அணிவகுப்பாக வந்து நில்லுங்கள்! தலைவனின் வார்த்தையைத் தட்டாமல் முதியவர்கள் மற்றவர்களிடமுள்ள குழந்தைகளைத் தாங்கள் பெற்றுக் கொண்டு, உடைமைகளைத் தங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு ஒதுங்கி நின்றனர். கிழவர்களின் சார்பாக ஒருவர் பேசினார், "குழந்தைகளையும் உடைமைகளையும் காப்பாற்றும் பொறுப்பைக் கிழவிகள் ஏற்கட்டும். நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம்!' - என்பதாக. அதை கோச்செங்கணான் மறுத்துவிட்டான். "அன்பார்ந்த சோழர் குலப் பெரியோர்களே! தாய்மார்களே! உங்கள் வீரத் திருமுகங்கள் கண்டு நாங்கள் புதிய பலம் பெற்று விட்டோம். நீங்கள் அனைவரும் இந்தப் பகுதியை அடுத்த இடங்களில் தங்கியிருக்க வேண்டும். நீங்கள் பெற்றெடுத்த வீர மறவர்களும் வீராங்கனைகளும் பகையை எதிர்க்கப் புறப்பட்டு விட்டார்கள். அவர்களை வாழ்த்தி அனுப்புங்கள். அனைவருமே திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்காது என்று எனக்கு நன்றாகத் தெரியும். பல்வேறு களங்களுக்குப் பிள்ளைகளை அனுப்பிப் பழக்கப்பட்டவர்களாயிற்றே. நீங்கள்! காதலனின் விழுப் புண்ணின்மீது முத்தமிடுவதென்றால் சோழ