ரோமாபுரிப் பாண்டியன்
331
ரோமாபுரிப் பாண்டியன் 331 வெல்லற்கு அரியான் இலங்கை வேந்தனின் போர்த்திறன் உணராத குலப்பகைவனாம் இராமன். "இன்று போய் நாளை வா!” என்று வேண்டினானாமே; அன்றிருந்த களக் காட்சியை நினைப்பதா? 'வாளுக்கு முத்தமிடும் தமிழனை இகழ்ந்தோரைத் தாள் பணியச் செய்வேன்' எனச் சூளுரைத்துச் சென்ற சேரன் செங்குட்டுவன், கனக விசயர் மண்ணிலே கண்ட இரத்தக்களரியை எடுத்துக் காட்டுவதா? களம் பல கண்ட சரித்திரம் வெற்றித் தேவியை ஆரத்தழுவிக் கொண்ட வரலாறு-இதுவரை சந்தித்திராத புதுமையான போரல்லவா இது! கொலைக் கருவிகளை மறைத்துக் கொண்டிருந்த புல்லர்கள் ஒரு புறம்: வெற்றுக் கைகளையே படைக் கலன்களாகப் பயன்படுத்திய மக்கள் மறுபுறம். இத்தகைய விந்தையான போரை எப்படித்தான் வர்ணிப்பது? < திடீரென்று வளைத்துக் கொள்ளப்பட்ட பண்டாரப் படை வரிசை தங்கள் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்வதற்கு முன்னதாகவே பூம்புகார் மக்களால் தாக்கப்பட்டார்கள்! "அய்யோ” என்று எழும்பிய ஒரு பெருங்குரல் வனப்பகுதியில் மோதி எதிரொலித்தது; ஆனால் அதற்குள்ளேயா மலைப்பாம்பிடம் சிக்கிவிட்ட முத்துநகையின் அபயக்குரலும் மறைந்து அழித்துவிட வேண்டும். இரு கூட்டமும் மோதிக் கொண்டன. மறைவிலிருந்த போர்க்கருவிகள் காலத்தை எதிர்பார்த்தக் கொண்டிருந்த வேல், வாள் எல்லாமே 'வேளை வந்துவிட்டது' என வெளிவந்தன. ய பளபளத்த கொலைக் கருவிகள் மட்டுமா? அல்ல; அல்ல; நடுக்காட்டிலே வாழ்ந்திருந்தவர்களின் நாடி நரம்புகளிலே புதிய முறுக்கு ஏற்பட்டது. செந்தலையாரின் சிம்ம கர்ச்சனையால் சிலிர்தெழுந்தவர் செங்களம் காணத் தயாராகிவிட்டார்கள்! பகையைத் தூளாக்கத் துடித்தவர்களின் விழிகளிலே கொலைவெறி தாண்டவமாடியது! எப்படிச் சமாளிப்பது இந்த எதிர்ப்பை? ஏதுமற்ற கரங்களால், எதிர்பார்க்காத பகைவர்களை வென்று விடுவதும் இயலுமோ? அய்யோ, எங்கிருந்தோ குதித்தவனுக்கு அடிமையானோமே; ஆணை யைக் கேட்டோமே! கெட்டழியப் போகிறோமே! இப்படி நினைக்கவில்லை, பூம்புகார் மக்கள்! அவர்கள் கரங்களிலே வாள் பளபளக்கவில்லை; ஆனால் கண் களிலே தோன்றிய இலட்சிய வெறியிலே தீக்குழம்பின் ஜ்வாலை தெரிந்தது!