பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

கலைஞர் மு. கருணாநிதி


334 கலைஞர்.மு. கருணாநிதி அந்தப் போர்க்களப் பேரிரைச்சலுக்கிடையே சற்று முன்பு அங்கே எழும்பிக் கொண்டிருந்த குதிரையின் காலடி ஓசை இப்போது கேட்கவில்லை. ஆனால், கொஞ்ச தூரத்திலே குதிரை வருவது மட்டும் நன்றாகத் தெரிந்தது. குதிரைமேல் அமர்ந்திருந்த உருவம் நன்றாக புலப் படவில்லை. ஆனால், அங்கு ஏற்பட்டிருந்த இனம் புரியாத பேரொ லியைக் கேட்டு, அவன் முன்னிலும் வேகமாகத்தான் குதிரையைத் தட்டிவிடுகிறான் என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது! செத்தவர்கள் எழுப்பிய மரண ஓலம் - சாகின்றவர்கள் வாயிலிருந்து புறப்படுகின்ற புலம்பல் - வாட்கள் மோதிக் கொள்வதால் ஏற்படுகின்ற போர்க்கள ஓசை, இவ்வளவும் காட்டுப் பகுதிகளிலே மறைந்து கொண்டி ருந்த முதியவர்களின் செவிகளிலும் பட்டன! போருக்குப் பின்வாங்குகின்ற மரபிலே வந்தவர்கள் அல்லர் அவர்கள்; முரசு ஒலி கேட்டு வீட்டுக்கொருவீரரை அனுப்பி வைப்ப தோடு மட்டுமல்ல வேளை வந்துவிட்டால் வேலெடுத்துப் பாயும் வீரக்குடியின் பரம்பரையில் உதித்தவர்கள்தாம். இருந்தாலும் அவர்கள் முகங்களிலே கவலையின் ரேகைகள் படர்ந்தன. - அதைப் போலத்தான் முதுபெருங் கிழவிகளின் இதயங்களும் சற்றுத் துணுக்குற்றன! அடுத்தடுத்த நாட்களிலே தங்கள் குடும்பங்களின் ஆண் மக்களையெல்லாம் போருக்கனுப்பிய பின், இனியும் வீரனில்லையே என்று ஏங்கி, மழலைகளின் கையிலும் வாளெடுத்துத் தந்து, "சென்றுவா மகனே செருமுனைநோக்கி! என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்த வீராங்கனைகள் அவர்களின் மூதாதையர் அல்லவா? புறமுதுகிட்டான் மகன் என்று பொல்லாங்கு கேட்டுப் புலியெனச் சீறி, மானம் கெட்டவ னுக்கு பாலூட்டிய மார்பகத்தை அறுத்தெறிவேன் என்று வஞ்சினம் ஏற்ற மறக்குடிப் பெண்டிரின் வரலாற்றை மறந்து விட்டவர்கள் அல்லவே அவர்கள்? இருந்தாலும் வாழ்வை அனுபவித்துவிட்ட அந்த வயோதிகர்களின் கலக்கத்திற்குக் காரணம். தாங்கள் பெற்றெடுத்த வீரத் திருவிளக்குகள் தாயகத்தின் மானம் காக்க அணைந்து கொண்டிருக்கிற நேரத்தில், அவர்கள் மட்டும் மறைந்து கொண்டு நிற்பதா என்பதே? "நாம் பெற்ற மக்கள் அங்கே மானம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; மடிந்து கொண்டிருக்கிறார்கள்! காட்டு மரங்களினூடே பதுங்கிக் கிடக்க நாம் மட்டும் என்ன சுயநலக்காரர்களா? அல்லது சாவதற்குப் பயந்த கோழைகளா? புறப்படுங்கள்! துவண்டு விழும் அவர்களுக்குத் தோள் கொடுக்கப் புறப்படுங்கள்!" . - முதியவர் ஒருவரின் குரல் இப்படி எழும்பி அந்த வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்தது!