336
கலைஞர் மு. கருணாநிதி
336 கலைஞர் மு.கருணாநிதி இதோ... வீரனாகச் சாகிறேன்! வேளிர்குடியின் வீரத்திற்கு இலக்கணமாய், நம் மன்னர் பெருந்தகையின் மானத்திற்கு ஒரு சின்னமாய்ச் சாகிறேன்! நீங்கள் போராடுங்கள்! உங்கள் உடலின் கடைசித்துளி இரத்தம் இருக்கும் வரையில் மானம் காக்கப் போராடுங்கள்!... எதிரிகளை மரமாளிகையின் பக்கம் போகவிடாதீர்கள்! அது நம் அரண்மனை. அங்கே இந்த அக்கிரமக்காரர்களை அண்ட விட்டுவிடாதீர்கள்!" -செந்தலையார் முன்னிலும் உரத்த குரலெடுத்து அலறினார். கீழே விழுந்து கிடந்த அமைச்சரிடம் ஓடோடி வந்தான் ஒரு வீரன். அவரது தலையைத் தன் மடி மீது வைத்துக் கொண்டான்! "ஏன் நீ இங்கே வந்தாய் ? ஓடு ஓடு இல்லை இல்லை... நில் வீரனே! நீ எனக்கு ஓர் உதவி செய்வாயா?... நம் வீரர்கள் வென்று விடுவார்கள்!... நிச்சயம் வென்று விடுவார்கள்!. நாளை... நாளை நம் மன்னர் வெற்றி வீரராகப் பகைவன் கோட்டையிலிருந்து பவனி வருவார்! என்னுடைய பிணத்திற்கு அவரையே தீயிடச் சொல்வாயா?... அப்போதுதான், கால மெல்லாம் அவருக்கு உழைத்த இந்தக் கட்டை வேகும்! செய்வாயா... பகை!... பகை!!...' மறுகணம் செந்தலையாரின் தலை சாய்ந்து விட்டது! அதே சமயத்தில் குதிரையின் காலடியோசை அங்கே எழும்பியது. வீரர்கள் ஏறிட்டு நோக்கினார்கள்! குதிரைமேலிருந்த உருவம் அவர்களைச் சேர்ந்த எவருடையதுமல்ல என்பதைக் கண நேரத்தில் தெரிந்து கொண்டார்கள்! 'சோழப் படை தான் வரவேண்டும்; படை நடத்தி வருகிற தானைத் தலைவன் முன்னே வந்துவிட்டான்போலும்' என்று கருதிய அவர்கள் அப்போது திடுக்கிட்டார்கள்! தாங்கள் மிகவும் நெருக்கடியான கட்டத்தை அடைந்து விட்டதாகவும் உணர்ந்தார்கள்! மறுகணம் தலைவனை இழந்த போர்முகப் படை என்னவாகுமோ- அது அங்கே நடந்து விட்டது! இருங்கோவேளின் படைவீரர்கள் கருவிகளை வீசி எறிந்து விட்டுச் செந்தலையாரின் சவத்தையும் அப்படியே விட்டு விட்டுப் புறமுதுகிட்டு ஓடத் துவங்கி விட்டார்கள்! குதிரையிலே வந்த வீரன் வேறு யாருமல்ல; கோச்செங்கணான் தலைமையில் சென்ற பூம்புகார் மக்களின் பாதச் சுவடுகளை அடையாளங்கண்டு வந்த கரிகால் மன்னனே தான்! காட்டுவழி வந்த அவன், போர்க்களத்தைச் சென்றடைவோம்: அங்கே இருட்டுலகில் வசித்து வந்த இருங்கோவேளின் படைகள்