ரோமாபுரிப் பாண்டியன்
341
ரோமாபுரிப் பாண்டியன் 341 அமைச்சர் செந்தலையாரின் உடலருகே நின்று கொண்டிருந்த ஒரு வீரன், வெறிபிடித்தவனைப் போல் அவர் மார்பிலே தைத்துக் கொண்டிருந்த வேலை உருவி எடுத்தான். "வேளிர் குலத்தை அழிக்க வந்த கொலைகார வெறியனே! எங்கள் அமைச்சரின் இதயத்தைப் பிளந்த இந்த வேல், உன்னையும் இல்லாமல் ஆக்கட்டும்! என்று கர்ச்சித்தான். கண் இமைக்கும் நேரத்தில் அந்த இரத்தம் தோய்ந்த வேலை முத்துநகையை நோக்கி வீசி எறிந்தான். "அய்யோ... வீரனே!" - அலறினான் கரிகாலன். முத்துநகை நிலைமையைச் சமாளித்துத் தப்புவதற்குத் தயாராவதற் குள் வேல் பாய்ந்து விட்டது! நெஞ்சிலே அல்ல; அவளை மாறுவேடதாரி யாக ஆக்கி வைத்திருந்த தலைப் பாகையில்! வேலோடு தலைப்பாகை கீழே வீழ்ந்தது! அலை அலையாய்ச் சுருண்ட அடர்த்தியான கூந்தலும் அவிழ்ந்து தொங்கியது! முத்துநகை தன் நெஞ்சிலே வேல் பாய்ந்து விட்டதைப் போல் அதிர்ச்சியில் தவித்துப் போனாள், அந்தக் கணத்தில்! முத்துநகையா? காரிக்கண்ணனாரின் புதல்வியா?"- கரிகாலன் தன் கண்களையே நம்பத் தயாராக இல்லாதவனைப் போல இப்படிக் கேட்டான். "எனனை மன்னித்து விடுங்கள் மன்னவா!" அரசன் சற்றும் எதிர்பாராத வண்ணம் அவனது காலடியிலேயே வீழ்ந்தாள் முத்துநகை. இந்தப் புதிரான காட்சியைக் கண்ட வேளிர்குல வீரனின் தாக்குதல் தொடரவில்லை! காரணம் 'மன்னவா, என்று முத்துநகை விளித்ததுதான்! அடுத்த கணமே எதிரே நிற்பவன் சோழ மன்னன் கரிகாலன்தான் என்பதை அவன் ஐயமறத் தெரிந்து கொண்டான். ஆகவே, அதைத் தொடர்ந்து அவன் நெஞ்சத்திலே கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த பழி வாங்கும் உணர்ச்சியும் விடை பெற்றுச் சென்றுவிட்டது. கரிகாலன் தான் பேசினான்: "முத்துநகை! எழுந்திரு! நான் உன்னை மன்னிப்பதா? நீ செய்த பயங்கரமான குற்றத்திற்கு இந்த உலகத்தில் மன்னிப்பே கிடையாது! 'அரசே! திடுக்கிட்டு எழுந்தாள் முத்துநகை. அவளது குரலிலே பீறிட்டெழுந்த சோகத்தை மன்னன் உணர்ந்து கொண்டான். "ஆமாம்! சோழப் பெருங்குடி மன்னனாக மகுடம் சூட்டிக் கொண்ட என்னுடைய உடலில் ஓட்டிக் கொண்டிருக்கும் வலக்கரமாகப் பிறந்திருக்க வேண்டிய நீ - என் இதயத்தைச் சுற்றிக் காவலிருக்கும்