பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

343


ரோமாபுரிப் பாண்டியன் 343 உறுதி கலந்த அவளது குரல் மர்மமான யவனக்கிழவரையும், அவரை மறைத்து வைத்துச் சதி செய்யும் தந்தை காரிக்கண்ணனாரையும் சுற்றிக் கொண்டு சென்றது ! ஆனால் அவளது துடிப்பான பேச்சைத் தடுத்து நிறுத்தி விட்டது மன்னனது குறுக்கீடு. இல்லை; இல்லை! நீ அனுபவித்த கொடுமைகளே போதும்! தென்றல் சிலுசிலுக்க வேண்டிய உன் வாழ்க்கையிலே இனிப்புயல் எழுப்பும் பேரொலி கேட்கக் கூடாது. மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய வாழ்வு மலர். நடுக்காட்டில் மரக்கிளையில் மோதிச் சிதறிச் சுருண்டுவிடக் கூடாது! நீ வாழ வேண்டியவள்! இனிநான் உனக்கு எந்த ஆணையும் இடமாட்டேன்! "ஆனால், ஒன்றும் மட்டும் பாக்கியிருக்கிறது மன்னவா!' "எதைச் சொல்லுகிறாய் முத்துநகை?' "இடையில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் ஏராளம் என்றாலும் அன்றொரு நாள் நான் எடுத்துக் கொண்ட இலட்சியம் ஒன்றுண்டு. ஆணுடை பூண்டு, உங்களிடம் அனுமதி பெற்றுப் புறப்பட்டேனே- அந்த முதற் பணியை நான் மறந்து விடவில்லை! செழியனை மீட்பதுதானே எனக்கு நீங்கள் அளித்த கட்டளை...?" 4 "ஆம்!" 'அதை முடிப்பதற்குள் - பாண்டிய நாட்டுக்குச் சேர்ந்திட வேண்டிய அந்தச் சொத்தை மீட்டுத் தருவதற்குள் - என் கைகளுக்கு விலங்கிடக் கருதலாமா?... புறப்படுங்கள் இப்போதே. இருங்கோவேளின் மரமாளிகைக்குச் சென்று செழியனை மீட்போம்!" w என்று சொல்லிவிட்டு முத்துநகை புறப்படத் தயாரானபோது அவர்களைச் சுற்றிலும் வேளிர்குடி வீரர்கள் பலர் சூழ்ந்து நின்றனர். கையொடிந்த நிலைக்கு ஆளாகிவிட்ட அவர்களால் எந்த வித ஆபத்தும் நேராது என்று இருவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர்கள் ஏதோ சொல்ல நினைக்கிறார்கள் என்பதுணர்ந்து, 'என்ன வேண்டும்' என்று கேட்கும் பாவனையில் அவர்களைப் பார்த்தார்கள். "கரிகால் மன்னரே! போரிலே வீர மரணம் அடைந்து விட்ட எங்கள் அமைச்சர் செந்தலையாருடைய சவத்தை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டுகிறோம். வேளிர் குடியின் மானத்தைக் காப்பாற்றத் தன் கடைசி மூச்சுள்ள வரை போராடிய அந்த வீரத்திருவுருவை அடக்கம் செய்கின்ற பாக்கியத்தை நாங்கள் வேறு யாருக்கும் தர இணங்கமாட்டோம். அந்த உரிமையையாவது எங்களுக்குத் தருகிறீர்களா? - முத்துநகையின் மேல் வேலெடுத்து வீசினானே, அந்த வீரன் இப்படி உணர்ச்சியுடன் பேசினான்.