344
கலைஞர் மு. கருணாநிதி
344 கலைஞர் மு. கருணாநிதி "பழி வாங்கும் உணர்ச்சியும் சதி புரியும் ஆவேசமும் உயிர் மூச்சோடு வெளியேறியபின் தூய்மையாகிறது. எதிரியின் பலம் என்ன என்பதை நான் நன்கு உணர்வேன். என்னைக் கொல்ல வந்த உங்களரசியார் நீதி தேவன் முன்னால் தானே தண்டனை பெற்றார்களே; அவர்களுடைய சவத்தைக் கூட அனாதையாக்கி விடவில்லை தெரியுமா? அரச பரம்பரை யைச் சேர்ந்தவரது இறுதி யாத்திரை எப்படியிருக்க வேண்டுமோ. அந்த அளவிலே முறையிலே கடுகளவும் குறையாத வகையிலேயே அடக்கம் செய்ய ஆணையிட்டேன். ஆகவே இந்த வேண்டுகோளை நான் தடுக்கவில்லை! அதைப் போலவே இந்தப் போர்க்களத்துத்தானைத் தலைவியாகிய முத்துநகையும் அதற்குக் குறுக்கே நிற்கமாட்டாள்." - - அரசன் சொல்லி முடித்ததும் வேளிர்குடி வீரர்களது முகத்தில் நன்றி உணர்ச்சி தலை காட்டியது. செந்தலையாருடைய சவம் கிடந்த இடம் நோக்கி நடந்தார்கள். அவரது உடலைக் கணநேரம் உற்றுப் பார்த்தான் கரிகாலன்! அந்தத் தியாகிக்கு மரியாதை செய்வதைப் போல் அவனது பார்வை இருந்தது. பிறகு முத்துநகையைத் திரும்ப பார்த்தான். குறிப் பறிந்த முத்துநகை மரமாளிகை இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். "நீங்கள் குதிரைமேல் ஏறி வாருங்கள் அரசே!" என்றாள் நடந்து கொண்டே "எதற்கு?" காட்டுப் பாதையில் கல்லும் முள்ளும் நிறைந்திருக்கிறதே; உங்களுக்குத் தெரியாதா?..." "அதற்கெல்லாம் பயந்தால் அரியணை ஏறியிருக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா? மக்களுக்காக உயிரையும், போர்க்களச் சாவுக்காக உடலையும் எந்த நேரத்திலும் அர்ப்பணிக்கத் தயார் என்ற மன உறுதியை ஏற்ற பிறகுதான் மகுடபதி என்ற தகுதியை சோழர்குல மரபினர் ஏற்றுக் கொள்வார்கள் முத்துநகை! உல்லாச புரியிலே உலவிட அல்ல; பொல்லா தவற்றை ஏற்கவும் பின் வாங்காத உடல் இது! அது மட்டுமல்லாமல் உன்னுடைய மலர்ப்பாதங்களே மேடுபள்ளங்களில் தடையின்றி நடக் கின்றபோது என்னை மட்டும் சுயநலக்காரன் என்று கருதி விட்டாயா?' முத்துநகை இதற்குப் பதிலேதும் சொல்லாமல் நடந்தாள். சமீப காலங்களில் எதிர்பாராத சம்பவங்கள் பலவற்றைச் சந்தித்துப் பழகிப்போன பூம்புகார் மக்களை அங்கே நேர்ந்த அதிர்ச்சி தரும் சந்திப்பும், அதைத் தொடர்ந்த உரையாடலும் அவ்வளவாக ஆச்சரியத்