ரோமாபுரிப் பாண்டியன்
353
ரோமாபுரிப் பாண்டியன் 353 தேளின் கொடுக்குப் போலக் காணப்பட்டன! இதோ! இமைப் பொழுதில் கொல்லப்பட்டு விடுவாள்! என் நாடு - நகரம் - இனம் - மானம் - மறவர் படை அனைத்தையும் சோழ நாட்டுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டு என் மடியிலும் இடம் பிடித்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு இவளுக்கு எவ்வளவு துணிச்சல்? அந்தத் துணிச்சலை இதோ தூளாக்குகிறேன்!' இப்படி எண்ணியவாறு அவள் அழகான சங்குக் கழுத்தை நெறிப்பதற்குப் போனான் இருங்கோவேள்! அட்டே! அவனது வேகத்தைத் தடுத்தது யார்? முத்துநகையின் கழுத்தை அமுக்குவதற்கு நீண்ட கை, அவள் இடையை வளைத்துக் கொள்ளக் காரணம் என்ன? அவனுக்குத் தெரியவில்லை அந்தக் காரணம்! எந்த முகத்தில் சாவின் அமைதியை உண்டாக்க நினைத்தானோ - அந்த முகத்தில் மாறிமாறி முத்தமிட்டான். முத்தமிடும்போதே 'வெனக் கதறி அழுதான். அழுது கொண்டே முத்தமாரி பொழிந்தான். முத்துநகை கண்களை விழித்தாள். அவளுக்கு நினைவு திரும்பியது. தன்னை அணைத்திருப்பவன் வீரபாண்டிதான் என்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டது. தன் அழகிய கைகளால் அவன் மார்பகத்தைத் தடவிப் பார்த்தாள். சந்தேகமில்லை; அது பேயல்ல; அவளுடைய அத்தானேதான்! 44 அத்தான்! - பலத்த கரையை உடைத்துக்கொண்டு புறப்பட்ட ஆற்றுப் பிரவாகத்தைப் போல் அந்த ஒருசொல் வெளிவந்தது. முத்துநகை! - சூடுண்ட நாக்கிலிருந்து தழுதழுத்து வரும் சொல் லைப் போன்றிருந்தது இருங்கோவேளின் குரல். இரு சொற்களுக்குமிடையே நீண்ட இடைவேளை இருக்கவில்லை. இருவரும் இறுகத் தழுவிக் கொண்டு மெய் மறந்து போய்விட்டனர். வெகு நேரத்திற்குப் பிறகு இருவரின் அன்பும் அன்புப் பிடியும் தளர்ந்தன. வீரபாண்டியின் முகம், உடல் அனைத்தையும் மிகக் கவலையோடு உற்று உற்று நோக்கினாள் முத்துநகை. "அப்படி என்ன பார்க்கிறாய் கண்ணே?" ஒன்றுமில்லை; அந்தப் பாவிகள் இருங்கோவேளின் ஆட்கள் தங்கள் பொன்னுடலில் எங்கெங்கே காயப்படுத்தினார்கள் என்றுதான் பார்க்கிறேன்!'