பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

கலைஞர் மு. கருணாநிதி


354 கலைஞர் மு. கருணாநிதி "காயம் எல்லாம் ஊமைக் காயங்கள்தாம்! நான் செத்துவிட்டதாகக் குளத்திலே போட்டுவிட்டார்கள். அதனால்தான் பிழைத்துக் கொண் டேன், என்ன இருந்தாலும் நீ இப்படி ஏமாந்திருக்கக் கூடாது!" "என்ன செய்வது? தங்களைப் போலவே கிழவன் வேடமிட்டு நின்றான் பாவி! வேடமணிந்ததும் தங்களுக்கும் அந்த வேல் மறவனுக் கும் வித்தியாசமே தெரியவில்லை. நான் ஏமாந்துவிட்டேன். அத்தான்! ஆனால், தாங்கள் உயிரோடு இருக்கிறீர்களே. அதுவே போதும்! நான் எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் கவலையில்லை. மன்னர் கரிகாலர் மதிவாணர் என்பதற்கு ஒரே சான்று, அவர் அந்த வேடதாரியிடம் மோசம் ஒளிந்திருப்பதைக் கண்டு பிடித்தாரே, அதுதான்!" "முத்துநகை! அவை எல்லாம் போகட்டும். இருங்கோவேளின் படைகளை அழித்துவிட்டதாக மகிழ்ந்து பயனில்லை. அவன் மாளிகை மண்மேடாயிற்று. அவன் அமைச்சர் வீழ்ந்தார் - என்றெல்லாம் எண்ணிப் பூரிப்படைவது மட்டும் போதாது! இருங்கோவேள் உள்ள வரையில் கரிகால் மன்னனுக்கு அழிவு நிச்சயம். அவனை முதலில் ஒழிக்க வேண்டும்!" "அவன் எங்கே இருக்கிறான்? ஏதாவது தெரியுமா? "கண்டுபிடிக்காமல் இருப்பேனா? அந்தக் கொடியவன் இங்கேகூட இருந்திடக்கூடும்." "ஆ!" "ஆமாம், அவ்வளவு மாயங் கற்றவன் அந்த மாபாவி! இன்றிரவு அவன் மன்னனைக் கவிழ்க்கும் திட்டம் தீட்டுவதற்காகப் பூம்புகார் அரண்மனைக்குள்ளேயே வரப்போகிறான்!" '6T GUT GOT?" "பதறிப் பயனில்லை முத்துநகை! இன்றைக்கு அவனைக் கொன்று பழி தீர்த்துக் கொள்ள வேண்டும்!" "அந்த நல்ல காரியத்தை நான் செய்கிறேன் அத்தான்! 'அவன் எப்போது அரண்மனைக்கு வருவான்? எப்படி வருவான்? விவரமாகச் சொல்லுங்கள்!" "அவன் வருவதற்கு முன்பே அவனை வரவேற்பதற்கும் வஞ்சக வலை விரித்து அதிலே மன்னன் கரிகாலனைக் கவிழ்ப்பதற்கும் திட்டமிட்டு, இருங்கோவேளின் தங்கை தாமரை பூம்புகார் அரண்மனை யில் நுழைந்திருக்கிறாள். அவள் மட்டுமல்ல; அவளுக்குத் துணையாக ஒரு வேளிர்குல வீரனும் சோழ நாட்டு மாளிகையில் சுற்றிக் கொண்டி ருக்கிறான்!"