பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

357


ரோமாபுரிப் பாண்டியன் . 357 கூடாதே என்று எண்ணியவனாய், “உம்.. இந்த எழுத்துக்கள் எப்படி என் கட்டாரியில் இடம் பெற்றன என்று சொல்லவில்லையே, நீ?" என்றான். "எனக்கு எப்படித் தெரியும்?" “அதுதான் உன் அத்தானின் திறமை; காரணம் நான் சொல்லட்டுமா? சொன்னால் என்ன தருவாய்!" "சொல்லுங்கள்! "நூறு தரவேண்டும்!" "6T 607 607!" - "ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் அந்தத் தொகையில் என்ன கேட்பான்? உடையா - உணவா அணியா மணியா? - புரியுமென்றுதான் கேட்கி றேன். நீயும் புரிந்துகொண்டுதான் என்னிடம் கேள்வி போடுகிறாய்!" "அதிருக்கட்டும். இதைச் சொல்லுங்கள்!" முத்துநகை அக் கட்டாரியை அவன் முகத்துக்கு நேரே நீட்டினாள். அவன் அதை வாங்கியவாறு "இந்தக் கட்டாரியால் இருங்கோவேள் கொல்லப்பட வேண்டும். ஆனால் அதைக் கொலை என்று நாடு நம்புவதைவிட அவனே தற்கொலை செய்து கொண்டான் என்று செய்தி பரவிவிடவேண்டும். அந்தச் செய்தி பரவுவதற்குச் சாதகமான பெயர் தான், கட்டாரியில் செதுக்கப்பட்டிருக்கிறது முத்துநகை! இருங்கோவே ளைக் கொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூட இந்தக் கட்டாரியை மிகவும் எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும். அதாவது எதிரிகள் குத்தியதுபோல் இல்லாமல் தானே தன் நெஞ்சில் குத்திக் கொண்டது போல் கட்டாரியைப் பிடித்துக் காரியத்தை முடிக்க வேண்டும். இப்போது புரிகிறதா இதில் இருங்கோவேளின் பெயரை ஏன் செதுக்கினேன் என்பதற்குக் காரணம்" என்று கொஞ்சு மொழி பேசினான். "இந்தத் திறமைக்கும் அறிவுக்கும் நூறென்ன? ஆயிரமே கொடுக்கலாம்!" - என்று ஆரம்பித்தாள் முத்து. ஆனால் ஆளுக்கு நூறாக ஆயிரத்தைப் பூர்த்தி செய்தார்கள். பின்னர் வீரபாண்டி தந்த கட்டாரியை மறைத்துக் கொண்டு முத்துநகை அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டாள். தன் வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டு எப்படியும் முத்துநகைக்குத் துணையாக வந்துவிடப் பெருமுயற்சி செய்வதாக வாக்களித்தான் வீரபாண்டி. காதல் உணர்வும் கடமை உணர்ச்சியும் ஒன்றோடொன்று போட்டி போடும் உள்ளம் பெற்ற ஏந்திழையாள், அன்றோடு தன் இலட்சியம் நிறைவேறப் போகிறது என்கிற பெருமகிழ்ச்சியில் பூம்புகார் நோக்கி நடந்து கொண்டி ருந்தாள். மரமாளிகையிலே செழியனைக் காணாது திரும்பியபோது