பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

361


ரோமாபுரிப் பாண்டியன் 361 விடியற்காலைப் பொழுதில் நம் ஆலோசனை மண்டபத்துக்கருகேயுள்ள சோலையில் யவனக்கிழவர் வேடத்தில் இருங்கோவேள், அந்த வேளிர் வீரனைச் சந்திக்கப் போகிறான். சதி உருவாகப் போகிறது. தங்களை வீழ்த்த! என்ன விதமோ எனக்குத் தெரியாது. இருவரும் சோலையில் சந்தித்து முடிவு செய்யப் போகிறார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்!" "இருங்கோவேள், அவ்வளவு துணிவுடன் அரண்மனைக்குள் நுழைந்து விடுவானா என்ன?" 'அதனால்தான் யவனக்கிழவர் வேடமாமே; அந்த வேடத்தில் வரப்போகிறானாம்!' மன்னன் யோசனையிலாழ்ந்தான். மீண்டும் வளவன் பேசத் தொடங்கினான்; "எனக்கு ஒரு வழி புலப்படுகிறது.' “என்ன வழி?” "இருங்கோவேளுக்காக நடுயாமத்திலிருந்து விடியற்காலம் வரையில் வேளிர் வீரன், நான் குறிப்பிட்ட சோலையில் மறைந்திருக்கப் போகிறான். வேளிர்வேந்தன் யவனக்கிழவர் வேடத்தில் வந்து அவனது வீரனைச் சந்திப்பதற்கு முன்பு நாம் அந்த வீரனை ஏமாற்றி விஷயத்தைப் புரிந்து கொண்டால்..." 'அது எப்படி முடியும்? "அரசே! மன்னிக்கவும்! தாங்களே யவனக்கிழவர் வேடமணிந்து அந்தச் சோலைக்குச் செல்வது; நல்ல இருட்டானதால் வேளிர் வீரன் ஏமாந்து விடுவான். அவனிடம் தாங்கள் அடித்தொண்டையில் 'என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறாய்?' என்று கேட்டால் எல்லாவற்றையும் சொல்லிவிடுவான். அதன் பிறகு அவனைக்கொண்டே இருங்கோவே ளைப் பிடிப்பதற்கும் அவன்மீது சதிக்குற்றம் சாட்டுவதற்கும் வழி ஏற்படுத்திக் கொள்ளலாம்." வளவா! இதற்கேன் இவ்வளவு தொல்லை? இருங்கோவேளும் வீரனும் சந்தித்துப் பேசும்போது நமது படைகளை மறைந்திருக்கச் செய்து அவர்களை அப்படியே மடக்கிவிட்டால்?" அரசே! தங்கள் ஆற்றல் எனக்குத் தெரியாதா? படைகள் கூட எதற்கு? தாங்கள் தனியொருவரே பல்லாயிரம் இருங்கோவேள் களுக்குப் பதில் சொல்வீர்களே! ஆனால் நான் நினைப்பது வேறு ! நமது சோழ மண்டலத்திலேயே இருங்கோவேளின் பக்கம் யார் யார் சேர்ந்து