பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

கலைஞர் மு. கருணாநிதி


366 . கலைஞர் மு. கருணாநிதி "ஏன், இன்று தங்கிவிட்டு நாளைக்குப் புறப்பட்டால் போகிறது. ஒருவேளை இந்த மாளிகையின் வசதிகள் போதவில்லையா?” 46 "என்னதான் இனிய வசதிகள் உபசாரங்கள் நடைபெற்றாலும் இது எங்கள் எதிரியின் வீடுதானே? உடலை வருத்துகின்ற மரமாளிகையில் படுத்துத் தூங்க வேண்டிய வேதனையிருந்தாலும் அது எங்கள் சொந்த இடமல்லவா? விரைவில் அங்கு சென்று விடவே நான் விரும்புகிறேன்' மரமாளிகை பற்றித் தாமரை குறிப்பிட்டதும், செழியனுக்கு நெஞ்சம் துணுக்குற்றது. 'அந்தோ பரிதாபம் - அந்த மாளிகை மண்மேடாகி விட்டதை இன்னும் அறிந்து கொள்ளாமல் உளறிக் கொண்டிருக்கிறாளே?' என எண்ணித் தனக்குத்தானே வருத்தப்பட்டுக் கொண்டான். அவளிடம் வேளிர் படையின் வீழ்ச்சியையும், அமைச்சர் செந்தலையாரின் பரிதாபகரமான முடிவையும் அறிவித்து விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் உடனே நினைப்பை மாற்றிக்கொண்டான். "அண்ணன் மரமாளிகைக்குத் திரும்புவதற்குள் நாம் போய்விடுவது நல்லதல்லவா? தாமரையின் இந்தக் கேள்விக்குச் செழியன் சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்: இது வரையில் நமது ரகசியம் வெளிப்படாமல் இருக்குமென்ற நம்பிக்கை வேறு இருக்கிறதா? திரும்பக் கொண்டுபோய் என்னை இருங்கோவேளிடம் ஒப்படைத்து விட்ட நல்ல பெயரைத் தவிர இளவரசிக்கு வேறென்ன மிஞ்சப் போகிறது?" "எதையும் தாங்கிக் கொள்வது என்ற முடிவுடன் தானே இந்தக் காரியத்தில் நான் இறங்கினேன்? பரவாயில்லை. தங்களுக்காக, வருவதை நான் அனுபவித்துக் கொள்கிறேன்." தாமரை பெருமிதத்தோடு இந்தப் பதிலைக் கூறினாள். செழியன் அவளிடம் அதிகம் பேச்சுக் கொடுக்க விரும்பவில்லை; ஏனெனில் தன்னைத் தொடர்ந்து வந்த மெய்க்காவலன் ஒருவேளை அங்கேயும் ஒளிந்திருந்து தன்னைக் கவனிக்கக் கூடுமென்று அவன் கருதினான். அந்த யூகம் சரிதான் என்பதுபோல் அவன் விழிகளில் மெய்க்காவலனின் உருவமும் தென்பட்டுவிட்டது! இளவரசி! ஓய்வெடுத்துக் கொள்க! நான் வெளித்தாழ்வாரத்தில் படுத்துச் சற்றுக் கண்ணயர்கிறேன்.' -எனக் கூறிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் செழியன் தாழ்வாரத்துப் பக்கம் வந்தான். மெய்க்காவலனும் அவனைத்