பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

கலைஞர் மு. கருணாநிதி


368 கலைஞர் மு. கருணாநிதி எவ்வளவு நேரமாக அந்த உருவம் இப்படி உட்கார்ந்திருக்கிறது? அதுவும் தெரியாது. அந்த இடமென்ன கொலை புரியும் சூதுச் சுரங்கமா? சித்திரவதை நடக்கும் சிறைக்கோட்டமா? அந்த உருவம் விளக்கின் பக்கம் முகத்தைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தபடியால் செழியன் அந்த உருவின் பின்புறத்தைத்தான் பார்க்க முடிந்தது! அமைதி நிலவிக் கொண்டிருந்த அந்த இடத்தில் என்ன அதிசயம் நடக்கப் போகிறதோ என்று செழியன் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அசைவற்று நின்றுகொண்டிருந்த செழியனின் தொண்டை அடைத் துக்கொண்டது. தன்னை மறந்து தொண்டையைக் கனைத்துக்கொண்டு, உடனே தவற்றை உணர்ந்து தன் தலையில் அடித்துக் கொண்டான். இந்த ஒலி கேட்ட மாத்திரத்தில் விளக்கடி உருவத்தின் தலை நிமிர்ந்தது. நிமிர்ந்த தலை அவன் பக்கம் திரும்பியது. உருவம் தன் கைகளில் விளக்கை எடுத்து, ஒலி வந்த பக்கம் திரும்பியது. அந்த விளக்கொளியில் உருவத்தின் முகத்தைச் செழியன் கண்டான். பார்த்தவுடன் பதைத்துப் போய் "ஆ! தாங்களா?" என்று கூச்சலிட்டு விட்டான். புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பாண்டிய நாட்டுத் தளபதி நெடுமாறனும் மிகத் தீவிரமாக ஒரு முயற்சியிலே ஈடுபட வேண்டு மென்று முடிவெடுத்ததை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. பட்டினப் பாலை அரங்கேற்றத்தின்போது அவைக்களத்தில் நிகழ்ந்த அமளிக்குப் பின் படைக்காவலன் நெடுமாறனும், பாவேந்தர் கடியலூராரும் சோழ நாட்டில் அரசருக்கெதிராகத் துரோக சக்தி வளர்ந்து வருவது பற்றிப் பேசிக் கொண்டார்கள். அப்போதுதான் புலவர் காரிக்கண்ணனாருக்கு நேர்ந்துள்ள நிலை பற்றியும் நெடுமாறன் உருத்திரங்கண்ணனாரிடம் கூறினான். அச்செய்தியால் தாக்குண்ட கடியலூரார் எவ்விதமாயினும் மறைந்து கிடக்கும் உண்மையினை அறிதல் வேண்டுமென்று துடித்து விட்டார். கரிகால் மன்னனுக்கிருக்கும் குழப்பங்களினிடையே இந்தக் குழப்பத்தையும் மீண்டும் புகுத்தக்கூடாது என்று நெடுமாறன் விளக்க மளித்து, அவன் அமைதி பெற்ற பிறகு அதுபற்றி பேச வேண்டுமென்ற எண்ணத்துடன் இருவரும் வந்திருந்தனர். அமைதிதான் தோன்றுவதற்கான அடையாளமே தெரியவில்லையே! புதுப்புதுப் புயல்கள் உருவெடுத்துக் கொண்டேயிருக்கின்றனவே! பூம்புகாரில் திடீர் திடீரென நிகழும் சம்பவங்களும், கேள்விப்படும் செய்திகளும் நெடுமாறனுக்கு மிக்க விசித்திரமாகத் தென்பட்டன. அந்த