பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

கலைஞர் மு. கருணாநிதி


372 46 கலைஞர் மு. கருணாநிதி "என்னப்பா திகைக்கிறாய்! வேளிர் வீரனே! என்னைப் பார்த்தால் சதியை நிறைவேற்றச் சக்தியற்றவனைப் போலத் தெரிகிறதா? நம்பு என்னை நீ மட்டுமல்ல, உனது மன்னர் இருங்கோவேளிடமும் சொல்! மன்னிக்கவும், அவர் எனக்கும் மன்னன்தானே! அவரிடம் சொல்! அரசன் கரிகாலனின் முடிவை யாரும் தடுப்பதற்கு வலுவில்லாதவாறு அருமை யான திட்டம் தீட்டியிருக்கிறேன். என் அருமை மகள் முத்துநகையின் ஆத்திரத்தையும் பொறுத்துக் கொண்டு எமது மன்னன் கரிகாலன் எம்மி டம் காட்டிய அன்புக்கு ஆழக் குழி தோண்டி விட்டு வேளிர்படையின் வெற்றிக்கு உழைக்கும் வீரத்தமிழ்ப்புலவன் தீட்டியுள்ள திட்டங்களை உமது மன்னனிடம் காட்டு!" என்றவாறு அவர் எழுதிக் கொண்டிருந்த ஓலைச் சுவடியை மடக்கிக் கட்டி, அவனுக்கு நேராக நீட்டினார் புலவர் காரிக்கண்ணனார்! அதை வாங்காமல் நின்றிருந்தான் செழியன். புலவர் உள்ளபடியே துரோகியாகி விட்டாரா? அல்லது பித்தம் தலைக்கேறியதால் அவரைக் கரிகால்மன்னர் அரண்மனையில் அடைத்து வைத்திருக்கிறாரா? அவரை நான் காண்பதற்கான சூழ்நிலை ஏன் அமைக்கப்பட்டிருக்கிறது? ஒருவேளை புலவர் துரோகியெனத் தீர்மானிக்கப்பட்டு வேளிர் படை வீரனாக இருக்கும் என்னையும் அவரையும் சந்திக்க வைப்பதால் மேலும் ஏதாவது தேவையான ஆதாரங்கள் கிடைக்குமென்று மன்னர் எதிர்பார்க்கிறாரா? -இந்தக் கேள்விக்குச் சரியான பதில் காணமுடியாமல் ஓரக்கண்ணால் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் எதிர்பார்த்தவாறு இருண்டு கிடந்த ஒரு மூலையில் மெய்க்காவலன் நின்றுகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் ஏழெட்டு வாட்கள் மின்னிக்கொண்டிருந்தன. மெய்க்காவலன் காத்திருக்கிறான் என்பதைச் செழியன் புரிந்து கொண்டான். என்ன விபரீதம் ஏற்படப் போகிறதோ என்று அவன் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. புலவர், செழியனை நோக்கி மேலும் சத்தம் போட்டுப் பேசலானார்: "பைத்தியக்காரப் புலவன் பாட்டு எழுதி உன்னிடம் நீட்டுகிறான் என்று எண்ணுகிறாயா? இல்லை. இல்லவே இல்லை. இவையனைத்தும் கரிகால் மன்னனை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டம். இருங்கோவேள் சோழப் பெருநாட்டுக்கு எவ்வாறு மன்னனாவது என்பதற்கான வழி முறைகளடா தம்பி. ஓலையில் தீட்டப்பட்டிருப்பவை. இன்னுமா சந்தேகம்? இதைக் கொண்டுபோய்ப் பத்திரமாக வேளிர்குல வேந்தரிடம் கொடு, சதி நிறைவேறியதும் என்னை விடுதலை செய்யச் சொல். எனக்கு