ரோமாபுரிப் பாண்டியன்
377
ரோமாபுரிப் பாண்டியன் 377 நேரிட்டால் தனக்குற்ற கேடுகளையெல்லாம் அவர்பால் எடுத்துரைத்துத் தக்கதோர் முடிவு காணச்செய்யலாம் என்று எதிர்பார்த்தார். அதற் கெனவே அவசர அவசரமாக ஓலைச் சுவடி எழுதத் தொடங்கினார். தனக்காக வாதாடும் ஆற்றல் மிக்க, வழக்குரைக்கும் கருவியாக அந்தச் சுவடி பயன்படுமே என்பது அவரது எண்ணம்! நெடுங்கதை எழுதுவது போல் பல்வேறு செய்திகளைத் தொகுத்து எழுதினார். அந்தச் சுவடிகளைப் படித்துப் பார்க்கும் ஆவல் அவருக் கிருந்தது. அதனை ஒப்படைக்க வேண்டியது உருத்திரங்கண்ண னாரிடத் தில்தான் என்று தீர்மானித்து அவரது வருகையை எதிர்பார்த்துக் கிடந்த புலவர் திடுமென வேளிர்வீரனைச் சந்திக்க நேரிட்டது! அவன் தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சமயத்தில் தான் ஓலையில் தன்னைப் பற்றி எழுதிய புதிர் நிறைந்த வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டுப் புதியதோர் பாடலை எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடலை முடித்துவிட்டுத்தான் அவர் வேளிர்வீரனைத் திரும்பிப் பார்த்தார். அந்தப் பாடலும் அவனிடம் தரப்பட்ட ஓலைச் சுவடிக்குள்ளேதான் இருந்தது. ய அவர் எழுதிய அந்தப்பாட்டை, அவரது அறையிலிருந்து வெளியே சென்ற செழியன் பிரித்துப் பார்க்கலானான். தன்னைச் சூழ்ந்து மெய்க்காவலர் வருகின்றனர் எனத் தெரிந்த பிறகும், அவன் அந்த ஓலையைப் படிப்பதிலே தீவிரம் காட்டினான். அதிசயிக்கும் வண்ணம் அமைந்த பீடம் - அதிர்ச்சியுண்டாக்கும் வகையில் தானே திறந்து கொண்ட கதவு எல்லாமே அவனுக்கு மிகுந்த அச்சத்தை உண்டாக்கி விட்டன. ஆயினும் அவன் நிதானமாக நின்று புலவர் எழுதிய பாடலில் மனத்தைப் பரவவிட்டான். - "ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்கா சணிந்த வல்குல் ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇத் தருமண வியல்வோள் சாய னோக்கித் தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை வினவ லானா வெல்போ ரண்ணல் யார்மக ளென்போய் கூறக் கேளினி குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு நாட்கடா வழித்த நனந்தலைக் குப்பை வல்வி லிளையார்க்கு கல்குபத மாற்றாத் தொல்குடி மன்னன் மகளே முன்னாட் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு