ரோமாபுரிப் பாண்டியன்
379
ரோமாபுரிப் பாண்டியன் 379 தான்? சே சே! எல்லாமே கற்பனைதான். இப்படியொரு முடிவு பிறக்கும். உடன் அதனைக் கலைத்துவிட்டு வேறொரு முடிவு கிளம்பும் -ஒரு வேளை முத்துநகையை யாராவது காதலிக்கிறார்களா? அவர்களை மிரட்டுவதற்காகப் புலவர் முயல்கிறாரா? சிறையில் கிடக்கும் இவர் மிரட்டுவது யாரை? உணர்ச்சிகளை எழுதி எழுதித் தீர்த்துக் கொள்வர் புலவர் பெருமக்கள் என்பார்களே; அதுபோல் முத்துநகையை விரும்பு கிறவனின் மீது தான் கொண்ட ஆத்திரத்தை இங்ஙனம் காட்டிக் கொள்கி றாரோ காரிக்கண்ணனார் எனச் சந்தேகமுற்றான். முத்துநகைக்குத் தமையன் ஏது? நம் கருத்துத் தவறானது என்று இதை எண்ணி இரண்டாம் முடிவை அழித்து விட்டான். தாமரைக்குத் தமையன் உண்டு. அவனைப்பற்றி எழுத இவருக் கென்ன விவரம் தெரியும்? சிறிது நேரம் குழம்பிக் கொண்டிருந்தான். அதுவரையில் மெய்க்காவல் படையினர் பொறுத்துக் கொண்டிருக்க வில்லை. வில்லிலிருந்து விடுபட்ட கணையென அவனைச் சூழ்ந்து கொண்டனர். எதிர்பார்த்த நிகழ்ச்சிதான் என்றாலும் செழியன் ஆத்திரங்கொண்டான். ஆனால் அந்த ஆத்திரத்தை வெளிப்படுத்துவது ஆபத்தில் முடியுமென்பதை உணர்ந்து கொண்டு உடனே அமைதி பெற்றான். மெய்க்காவலர் தலைவன் செழியனின் கையிலிருந்த ஓலைச் சுவடியைப் பிடுங்கிக்கொண்டான். செழியன் அந்த வீரர்களைப் பார்த்து, "இதெல்லாம் என்ன வேடிக்கை? என்று கேட்டான். வீரர்கள் கலகலவெனச் சிரித்தவாறு படிக்கட்டுகளின் வழியாக அவனை மேலே இழுத்துக் கொண்டுவந்தார்கள். உன்னால் எங்களுக்கு ஆக வேண்டிய வேலை முடிந்து விட்டது. இனிமேல் போகலாம்" என்று காவலர் தலைவன் செழியனின் முதுகில் தட்டிக் கொடுத்தான். வீரர்கள் தொடர அந்தத் தலைவன் ஓலைச் சுவடியுடன் அங்கிருந்து அகன்றான். அவர்கள் போகும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான் செழியன், பெருத்த குழப்பத்துடன் மெல்ல நடக்கலானான். சுவடியைக் கைப்பற்றிய மெய்க்காவலர்கள் அவசர அவசரமாக அரசன் மாளிகைக்கு ஓடினார்கள். காவலர் தலைவன் வீரர்களை வெளியே நிற்க வைத்து விட்டு ஓலைச் சுவடியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான். கரிகாலன் பொன்னும் மணியும் மின்னுகின்ற கட்டிலொன்றில் கண் மூடியவாறு சாய்ந்தி ருந்தான். மெய்க்காவலன் அருகே போய் நின்றான். கனைத்துப் பார்த்