பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

381


ரோமாபுரிப் பாண்டியன் 381 செழியன் காரிக்கண்ணனாரின் முன்னே நின்று கொண்டிருந்த அதே நேரத்தில் உருத்திரங்கண்ணனார் கரிகால் மன்னனின் மாளிகை முகப்பில் நின்று கொண்டிருந்தார். புலவரைக் கண்ட காவலன் அவரைப் பணிந்து “என்ன தேவை தங்களுக்கு?” என்று கேட்டான். 4 $ 'அவசரமாக மன்னரைப் பார்க்க வேண்டும்" என்று புலவர் கூறியதும் காவலன் உள்ளே ஓடினான். மாளிகையிலுள்ள கட்டிலில் சாய்ந்தபடி விழியிமைகளைச் சுருக்கியவாறு தோற்றமளித்த கரிகாலனிடம் காவலன்; "கடியலூர்ப் புலவர் மன்னர் மன்னரைக் காணவிரும்புகிறார்" என மொழிந்து நின்றான். 'வரவிடு!" என்று மன்னன் பதில் கூறினானே தவிரப் புலவர் வந்திருக்கிறார் என்ற செய்தியை கேள்விப்பட்ட ஆவலோ பரபரப்போ எதுவும் அவன் முகத்தில் தலைகாட்டவில்லை. அவனுடைய சிந்தனையெல்லாம், அவனைச் சுற்றியும் பூம்புகாரைச் சுற்றியும் சுழன்று கொண்டிருக்கிற விசித்திரமான நிழ்ச்சிகளைத் தொடர்ந் தது! மாளிகைக்குள்ளே தனக்கெதிராக நடைபெறும் பயங்கரமான சதித்திட்டங்களைப் பற்றி உணர்ச்சி கொப்பளிக்க எண்ணிக் குமுறினான். 'வரவிடு' என்று கூறினானே தவிர வரப்போகிற புலவரை எதிர்கொண்ட ழைக்க எழுந்தானில்லை. காவலன் போனதுமே புலவர் வருவதை அறவே மறந்துவிட்டான். 'வரவிடு' என்று சொல்லிக் கொண்டே விழிகளை மூடிச் சிந்தனைக் கடலில் வீழ்ந்து விட்டான். எட்டுத் திக்கும் முரசு கொட்டி எதிரிகளைப் பணிய வைத்த அந்த ஏற்றமிகு வெற்றிவிழாத் திருநாள் எங்கே? அந்த நாளில் ஆனைமீதமர்ந்து சோழ மண்டலத்துப் பெருமக்கள் வாரியிறைத்த பூமழைக்குள்ளே சிக்கித் தவித்த சிறப்பான காட்சி எங்கே? களம் பல கண்டு கவின் தமிழ்க் கற்கண்டைக் கவிஞர்கள் தரப்பெற்றுக் கொண்டு கொலுவீற்றிருந்த மாட்சிதான் எங்கே? எதுவும் மறைந்துவிடவில்லை. மறவர் குடிப்பெருமை ஓடிவிட வில்லை. மானங்காத்திடும் தமிழ் மரபின் மாண்பு அழிந்துவிடவில்லை. அவனது ஏக்கத்திற்குக் காரணமே, எப்படித் தன் அரண்மனைக்குள் எதிரிகளின் கையாட்கள் நிறைந்திருந்தார்கள் என்பது தான்! பூம்புகாருக் குள்ளேயே சோழ மண்டலத்தின் பகைவர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஒரு வேதனையினால்தான் சில நாழிகை. நேரத்தில் துரத்தியடித்திருக்க வேண்டிய வேளிர் மன்னனையும் அவன் படையினரையும் எதிர்த்துத்