பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

383


ரோமாபுரிப் பாண்டியன் 383 கனவுலகின் கதாநாயகனாக அவனே நின்று நடக்க வேண்டிய காரியங்களுக்குத் திட்டம் தீட்டத் துவங்கினான். "வரச் சொல்லுகிறார் மன்னர்" என்று வாயிற்காப்போன் கூறியதும் மிக்க மகிழ்ச்சியுடன் புலவர் உள்ளே சென்றார். ஆனால் அங்கே அவர் மன்னனின் நிலைகண்டு வியப்புற்றார். தன்னை வரச்சொல்லிவிட்டு மன்னன் உறங்குகிறானேயென்று அதிசயித் தார். கனைத்துக் காட்டினார். வேந்தனின் சிந்தனை அறுபடவில்லை. அரசன் எழும் வரையில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துகொண்டு ஒரு புறத்தில் நின்றார். புலவர் பெருமக்கள் என்றால் கரிகாலர் எவ்வளவு மரியாதை காட்டுவார் - ஏழடி தூரம் பின்னால் நடந்து சென்று வழியனுப்பி வைக்காவிட்டால் பெரும் பாதகம் என்று கருதுகிற கொற்றவனாயிற்றே! அவரா என்னை வரச்சொல்லிவிட்டு அதற்குள் இவ்வளவு அலட்சிய மாகத் துயில் கொண்டுவிட்டார்? புலவர் உருத்திரங்கண்ண னாருக்கு வியப்பும் வேதனையும் மாறி மாறித் தோன்றலாயின! அப்போது யாரோ வரும் காலடியோசை கேட்கவே புலவர் தான் நிற்பது தெரியாமல் தூணின் பக்கம் மறைந்து கொண்டார். என்ன நடக்கப் போகிறது என்று அறிய வேண்டுமென்ற ஆசையால் அல்ல! வருகிறவர்கள் தான் நிற்கிற காட்சியைப் பார்த்துத் தன்னைப் பற்றித் தகுதிக் குறைவாக நினைத்துவிடக்கூடாதே என்ற கூச்சத்தால் அவர் யார் கண்ணிலும் படக்கூடாது என்று மறைந்து நின்றார். உள்ளே வந்தவர்கள் மெய்க்காவல் படையினைச் சேர்ந்தவர்கள்தாம். செழியனிடமிருந்து ஓலைச் சுவடியைப் பறித்துக் கொண்டுவந்த தலைமை மெய்க்காவலன் அரசனின் அருகே சென்றான்; நின்றான். பின்னர் மன்னன் பார்வைபடும் இடத்தில் சுவடியை வைத்துவிட்டு வெளியேறினான். தூண் மறைவில் நின்ற உருத்திரங்கண்ணனாரை அவன் கவனிக்காமலே போய்விட்டான்! புலவர் பெருமான் அவன் வைத்துவிட்டுப் போன ஓலைச்சுவடியை உற்றுப்பார்த்துக் கொண்டு நின்றார். அந்தச் சுவடியிலே பதிந்துவிட்ட அவர் விழிகளை அவரால் மீட்க முடியவில்லை. ஓலைச்சுவடியென் றாலே தமிழ்ச் செய்யுட்கள் அடங்கிய கருவூலம் என்றுதானே புலவர்கள் எண்ணுவர்? அந்த எண்ணத்தால் உந்தப்பட்டுக் கடியலூரார் அதனை யெடுத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவலுக்கு அடிமையானார். ஒருவேளை அரசியல் பற்றிய கருத்துக்களோ நிலைவிளக்கங்களோ அதிலிருந்தால் என்ன செய்வது? அதனைத் தான் படிப்பதென்பது அறச் செயல் அல்லவே என்ற அச்சம் அவரைத் தயங்க வைத்தது. மேலெழுந்த