பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கலைஞர் மு. கருணாநிதி


</poem> "நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென வரைய சாந்தமும் திரைய முத்தமும் இமிழ் குரல் முரசும் மூன்றுடன் ஆளுந் தமிழ்கெழு கூடல் தண்கோல்வேந்தே!" </poem>

"ஒற்றுமை குலைக்கப் பகைவர்கள் பல வழியும் முயல்வர். நண்பரைப் போலவும் நல்லன தேடுவார் போலவும் பேசி இருவரிடமுள்ள ஒற்றுமையை மாய்க்கத் திட்டம் போடுவர். அவைகளுக்கு இடந்தராமல் இருவரும் நட்புக் கொள்வீராக!" என்று அறிவுரை கூறினார். தன் வீட்டின் முன்னே நடந்த நிகழ்ச்சியை மனத்தில் வைத்துக்கொண்டுதான் புலவர் அங்ஙனம் கூறினார்.

"இன்று போல் என்றும் உமது உறவு தழைக்கட்டும்! நுமது வேல் வென்று வென்று போர்க்களத்தில் புகழொளி வீசட்டும்! நமது புலியும் கயலும் பகை நாட்டுக் குன்றுகளிலே செதுக்கப்படட்டும்!"

எனப் புலவர் தன் நெஞ்சைத் திறந்து காட்டியபோது இரு மன்னர்களும் புலவரைத் தழுவிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

பேரரசர்களின் அணைப்பிலே அகமகிழ்ந்த புலவர் பெருமான், "தமிழ் வாழ்க! தாயகம் மேன்மேலும் வெற்றிபெறுக!" எனத் தழுதழுத்த குரலில் கூறினார். அவரது கண்கள் அவரையும் அறியாமல் குளமாகிவிட்டன. "என்னுடைய பலநாள் ஆசை இன்று நிறைவேறியது. பாண்டியரும் சோழரும் என்றைக்குப் பகைத்துக் கொள்வார்கள்; நேரம் பார்த்துப் போர் தொடுக்கலாம் என ஏங்கிக் காத்திருக்கும் வேளிர்குடித் தலைவர்களும், ஒளி நாரகர்களும் இடை நிலங்களில் வாழும் பொதுவரும் இந்தநாள் விழா நிகழ்ச்சி கேட்டு ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டிருப்பார்கள்" என்று காரிக்கண்ணனார் விழிகளை அகலத்திறந்தவாறு புதிய துடிப்புடன் முழங்கினார்.

"எல்லாம் உங்கள் கரிகால் மன்னரின் அரசியல் அறிவு நுட்பத்தால் விளைந்த முடிவுகள்" என்று புன்முறுவலோடு கூறினான் பாண்டிய மன்னன்.

"இல்லை; இல்லை! அதெல்லாம் ஒன்றுமில்லை... ஏதோ நடக்கவேண்டுமென்றிருந்தது; நடந்துவிட்டது!" என்றான் கரிகாலன்.

புலவர், பெருமிதத்தோடு பேசினார்: "ஏன் மன்னவா மறைக்க வேண்டும்? தங்களின் அரசியல் அறிவைப் பாராட்டி எழுதுவதற்குச் சுவடிகள் போதாது என்பதை நாடறியும்; நானறிவேன். இன்றல்ல. இளமைப் பருவத்திலேயே தாங்கள் சாதித்த காரியங்கள், ஒப்பிடுவதற்-