ரோமாபுரிப் பாண்டியன்
391
ரோமாபுரிப் பாண்டியன் 391 "அய்யோ! என்னைப் பற்றி எவ்வளவு பெருமையாகக் கருதியிருக்கிறார் கள்! அவர்களிடம் சென்று நான் தோல்வியால் தொங்கிய தலையைக் காட்டுவதைவிட 'எங்கேயோ தொலைந்து விட்டான்' என்ற செய்தி அறிவித்து விட்டு ஓடிவிடுவது மேலன்றோ?" எனத் தனக்குள் கூறிக் கொள்வான். போர் முகத்தில் கரிகாலனின் மின்னல் வீச்செனச் சுழன்ற வாளுக்கெதிர் நிற்க முடியாமல் தனது படை வீரர்கள் மிரண்டோடிய காரணத்தால்தானே அன்றைய தினம் மாபெரும் தோல்வியை அணைத் துக் கொள்ள நேரிட்டது? கரிகாலன் இல்லாத சோழர்படை தன் கால் தூசுக்குச் சமானம் என்று அவன் தீர்மானித்திருந்தான். அவனுடைய திட்டம் வெற்றிகரமாக நடைபெறுமேயானால் கரிகாலன் ஒழிந்து விடுவான். சோழநாட்டில் காரிருள் கப்பிக் கொள்ளும். பின்னர் இருங்கோவேள்தான் பூம்புகாரின் மன்னன், உறையூருக்குத் தலைவன். காஞ்சி விழுந்துவிடும், அந்த எதிர்காலக் கனவுகளுடன்தான் அவன் திட்டம் தீட்டினான். திட்டம் தீட்டியபோது குறுக்கிட்டுத் தடுக்காத சில விளைவுகள் அவனை வாட்டி வதைக்க ஆரம்பித்தன. ட் 'முத்துநகை கரிகாலனைக் கொன்று விடுகிறாள் என்று நம்புவோம். உடனே அவளுக்குத் தெரியப்போகிறது நான்தான் இருங்கோவேள் என்று! பிறகு அவள் என்னை மதிப்பாளா? தங்கம் நிகர் கரங்களால் தழுவுவாளா? 'அத்தான்' என அழைப்பாளா? 'அன்பே' என அழைப்பாளா? இல்லை! நிச்சயமாக இல்லை! அவளை நான் இழந்துவிட வேண்டியதுதான். இழப்பதோடு முடியாது. என்னைப் பழி தீர்க்காமல் அவள் ஓயமாட்டாள். அல்லது தன்னையறியாமல் தான் நாட்டுக்குச் செய்த துரோகத்தை எண்ணித் தன்னைத் தானே சாவின் கையில் ஒப்படைத்து விடுவாள்! அய்யோ! அவளுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் ஏற்படும்! என்னை அவள் உயிரைவிட மேலாக நேசிக்கிறாளே; என் நெஞ்சத்திலே முழு இடமும் அவளுக்கே சொந்தமென்று நினைத்திருக்கும் அந்தப் பவளக்கொடியாள் என் திட்டத்தின் உண்மை உருவம் வெளிப்பட்டதும் 'பாவி! பழிகாரா!' என வசைமாரி பொழிந்து சபித்துக் கொட்டிவிடுவாளே! அவளுடைய மென்மையான இதயம் வரப்போகும் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது அல்லவே! "அவளது காதலைத் துறந்து - அவளை ஏமாற்றி-உயிரோடு வைத்துச் சித்திரவதை செய்து - கரிகாலனைக் கொன்று விடுவதால் என் வீரம் வெளிப்படவா போகிறது? சூழ்ச்சித் திறன்தான் வஞ்சகர்களால் போற்றப்படும். முத்துநகையை நான் காதலிக்கிறேன்; நெஞ்சார விரும்புகிறேன்; பெருந்தேவியின் இடத்தை அவளுக்கு என் இதயத்தில்