பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

கலைஞர் மு. கருணாநிதி


394 கலைஞர் மு. கருணாநிதி "ஏன் மன்னனாகப் பிறந்தோம்- குடி மக்களில் ஒருவனாகப் பிறந்திருக்கக் கூடாதா?" என்று மனம் கலங்கும். “நீ மன்னனாகப் பிறந்ததாக யார் சொன்னது? மன்னன் வீட்டில் பிறந்தாய்; நீ குடி மக்களில் ஒருவனாகத் திகழ வேண்டுமென்று விரும்பி யதை யாரும் தடுக்கவில்லையே!" மனத்தின் இன்னொரு பகுதி, விடையிறுக்கும். இந்த இரண்டு பகுதியில் எது இருண்ட பகுதி, எது ஒளிமிக்க பகுதி என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சில நாழிகை நேரத்தில் நடக்க வேண்டிய காரியத்திற்கு இருங்கோவேளின் இறுதியான முடிவு என்ன? அவன் யாரைப்போய் யோசனை கேட்பது? அமைச்சர் செந்தலையாரையா, அல்லது அவனது வீரத் தளபதிகளையா? அவர்கள் தான் எலும்புப் பொடிகளாக மாறி மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டார்களே-அவனுக்கு யோசனை சொல்ல அவனைத் தவிர வேறு யாருமேயில்லை! தங்கை தாமரைக்கு அவன் திட்டமே பிடிக்காது. அவளிடம் இந்தச் சிக்கலை வெளியிட்டால் அழுது புலம்புவாள், 'அண்ணா! ஓடிவிடு! பகைவர்களிடம் சிக்கிக் கொண்டு வேளிர்குலத்தினர் மிச்ச மீதியாக வைத்திருக்கிற நம்பிக்கையையும் நாசமாக்கி விடாதே!' என்று கெஞ்சிக் கேட்பாளே தவிர, உருவான ஆலோசனை எதையும் கூறக் கூடியவள் அல்லள். கனல் கக்கும் கண்களில் புனல் தேங்க-இமைகளை மூடிக்கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். சின்ன இடை நெளிய, கன்னக் கதுப்பில் அறுத்து வைத்த பழத்தின் அழகு வண்ணம் காட்டியவாறு, அன்னநடையாள் அச்சடித்த சிலையனையாள்-அழகி முத்துநகை 'அத்தான்' என அழைத்தவாறு எதிரே வந்தாள். மாணிக்க மலர்க்கொடியை இழுத்துத் தோளில் படர விட்டுக் கொண்டான் இருங்கோவேள். "ஏனத்தான் ஒரே சிந்தனையில் மூழ்கியிருக்கிறீர்கள்? என்ன நடந்தது? என்னிடம் கூறுங்கள்!' எனப் பொன்னிற விரல்கள் கொண்டு அவன் செந்நிறக் கண்ணோரத்தில் தடவிக் கொண்டிருந்தாள். 'கண்ணே, முத்துநகை! இன்று ஓர் உண்மையைச் சொல்லப் போகிறேன். அது கேட்டு நீ அதிர்ச்சி அடைவாய் என்று நன்றாகத் தெரியும். அதன் பிறகு நீ என்னை வெறுக்கவும் கூடும்!" என்று தயங்கித் தயங்கிப் பேசினான் இருங்கோவேள். "பரவாயில்லை! சொல்லுங்கள் அத்தான்!" என்றாள் முத்துநகை.