பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

கலைஞர் மு. கருணாநிதி


402 கலைஞர் மு.கருணாநிதி மென்ற ஆத்திரம் அவனைவிட்டு அகலவில்லை. ஆனால் முத்து. நகையை தனக்காகப் பலியிட அவன் விரும்பவில்லை. அவன் மனத்தில் மூண்டெழுந்த காதலும்-அந்தக் காதல் விளைவித்த குழப்பமும் தன்னையே தியாகம் செய்து கொள்ளுமளவுக்கு நிலை மையை வளர்த்துவிட்டன. இந்த முடிவைப் பொறுத்தவரையில் செழியனுக்குத் தோல்விதான். அவன் எதிர்பார்ப்பதெல்லாம் திருந்திய இருங்கோவேளின் அமைதி யான நல்வாழ்க்கையைத்தான்! அந்த அமைதியான வாழ்வை, அடிமை வாழ்வென எண்ணினான் இருங்கோவேள், அப்படி வாழ்வதைவிடச் சாவது மேல் என்று முடிவு செய்தான். அவன் செய்த முடிவினை உணராத செழியன், இருங்கோவேளின் இருப்பிடத்திற்கு அண்மையில் உள்ள மண்டபத்தருகே உலாவிக் கொண்டிருந்தான். ஓலையை இந்நேரம் இருங்கோவேள் பார்த்திருக்கக் கூடும் - மனமாற்றம் அடைந்திருக்கக்கூடும்-அல்லது தன்னை யாரோ கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பயத்தில் அரண்மனையை விட்டு வெளியேறி விடக்கூடும்-என்று பலவிதமாகச் சிந்தனையை அலையவிட்டுக் கொண்டிருந்தான். அவன் அவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் உள்ளே இருங்கோவேள் முத்துநகையின் கையால் சாவதற்குத் தயாராகி, யவனக் கிழவர் வேடமணிந்து கொண்டிருந்தான். குறிப்பிட்ட வேளை வந்து விட்டதாக உணர்ந்த செழியன், வளவன் வேடத்திலுள்ள இருங்கோவேளைச் சந்திப்பதற்காக அவனிருப்பிடத்திற்குள் நுழைந்தான். நுழைந்தவன் கண்களில் வியப்பின் அறிகுறி தோன்றியது. திடுக்கிட்டான். அங்குமிங்கும் சென்று பார்த்தான். அங்கே இருங்கோவேளைக் காணவில்லை செழியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தான் எழுதிய ஓலையிருக் கிறதா என்று தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. அங்கு வீசிக் கொண்டி ருந்த மென்காற்றில் பலகணியோரமாகப் படபடவென்ற மெல்லிய ஓசை கேட்டது. சென்று கவனித்தான். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. விளக்கை எடுத்துக் கொண்டு பலகணிப் பக்கம் வந்தான். அவன் எழுதிய ஓலை அளவுக்கே மற்றோர் ஓலை! அதை அவசரமாக எடுத்துப் படித்துப் பார்த்தான். அதில், “இருங்கோவேளை மிரட்டாதீர்கள்! அவன் வீரனாகத்தான் சாவான்!” என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன!