பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

403


ரோமாபுரிப் பாண்டியன 403 செழியன் அந்த வரிகளைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து விட்டு, அந்த ஓலையை இடுப்பில் செருகிக் கொண்டு அங்குள்ள இருக்கையொன்றில் பலத்த யோசனையுடன் உட்கார்ந்தான். இருங்கோ வேள் தன்னை வரச் சொல்லிவிட்டு எங்கே போயிருக்க முடியும் என்ற ஆராய்ச்சிக்கு அவனால் முடிவு காண இயலவில்லை. இருங்கோவேள் போயிருக்குமிடம் அவனுக்கு எப்படித் தெரியும்! அவன் தன் அழகான காதலியின் தங்கக் கரங்களிலே மின்னிக் கொண்டி ருக்கும் கட்டாரியை முத்தமிட்டுக் கண்களை மூடுவதற்காக அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தான். முத்துநகையிடம் சதித்திட்டம் பற்றிக் கூறிய வார்த்தைகள் எல்லாம் இருங்கோவேள் மனத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தன. "இன்றிரவு நடுயாமத்தில் இருங்கோவேள், யவனக் கிழவர் வேடத்திலே அரசனைக் கொல்வதற்குத் திட்டமிட்டிருக்கிறான். அந்தச் சதித்திட்டத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் உள்ளே யிருந்து தாமரை செய்து முடிக்கப் போகிறாள். மாளிகைக்கு அருகில் அரசனின் ஆலோசனை மண்டபத்திற்கு ஒட்டினாற்போலுள்ள சோலை வழியேதான் யவனக் கிழவர் உருவில் இருங்கோவேள் வரப்போகிறான். அவனை வரவேற்பதற்கு வேளிர்குல வீரன் தயாராக இருப்பான்." இந்தத் திடுக்கிடும் தகவலைச் சொல்லித்தான் முத்துநகையை அதிர்ச்சி அடைய வைத்துப் பிறகு தனது சதித்திட்டத்திற்கு அவளை இணங்க வைத்தான்.அந்தக் கட்டளையை நிறைவேற்ற - கடமையினைச் செய்ய கரிகாலனையும் அவன் நாட்டையும் காப்பாற்ற இருங்கோவேள் தந்த கட்டாரியுடன் சோலையிலே ஒளிந்திருந்தாள் முத்துநகை. - அவள் ஒளி மிகுந்த விழிகள் சோலையைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன. அவள் எதிர்பார்த்த வேளிர்குல வீரனையும் காணோம்; யவனக் கிழவனையும் காணோம். அவள் உள்ளத்தில் ஒரே பரபரப்பு. அவள் காதுகளால் உணர முடிந்தது, நேரம் ஆக ஆக நெஞ்சு வெடிப்பது போன்ற சங்கடம். மேனியெங்கும் ஒரே நடுக்கம். வியர்வை கொட்ட ஆரம்பித்தது. தன் வாழ்நாளில் சோழ மண்டலமே பெருமை கொள்ளக் கூடிய மாபெரும் காரியமொன்றினைச் செய்திடப் போகிறோம் என்ற துடிதுடிப்பு அவளை ஆட்டிப் படைத்தது. அவளைவிட அதிகமான துடிப்புடன் இருங்கோவேள் சோலைப் பக்கம் வந்து கொண்டிருந்தான் - யவனக் கிழவர் வேடத்தில்! அவன்