406
கலைஞர் மு. கருணாநிதி
அவள் இதயம் கூச்சலிட்டது. கட்டாரியைப் பலமாகப் பிடித்துக் கொண்டு புதர் ஓரமாக நகர்ந்து சென்றாள்! அங்கே வந்து விட்டான்! பாய்ந்து குத்தப் போகிறாள்! ஒரே வீச்சு! யவனக்கிழவன்! ஆம். அந்த இருங்கோவேள் செத்து மடிவான் என்ற ஆவேசத்துடன் பாய்வதற்குத் தயாரானாள். என்ன அதிசயம்? எத்துணை விபரீதம்! அதோ மற்றொரு யவனக் கிழவன்! இரண்டு கிழவர்களில் உண்மையான இருங்கோவேள் யார்? அவள் திகைத்துத் திரும்பினாள். அவளுக்குப் பின்னால் மற்றொரு யவனக் கிழவன்! அவள், கண்களைக் கசக்கிக் கொண்டாள். தன்னைச் சுற்றி மூன்று யவனக் கிழவர்கள் நிற்பதைத் தெளிவாகக் கண்டாள். அந்த மூன்று யவனக் கிழவர்களும் அடுத்தடுத்து வந்ததும் முத்துநகையின் மூளையே குழம்பும் வண்ணம், அவளைத் திகைப்புக் கடலிலே திணற அடிப்பது போதாதா? அவளுக்கு முதுகுப் புறமாய் வந்த மூன்றாவது யவனக் கிழவரை ஒட்டி இன்னொரு பெரியவருமா திடீரென்று தோன்றவேண்டும்? 44 "அவர் யார்?... என் தந்தை மாதிரித் தெரிகிறாரே? இந்த நள்ளிரவில் அவர் எப்படி இங்கே வந்தார்... பழைய துரோகத்தை இன்னும் அவர் தலைமுழுகவில்லையா?..." -என்றெல்லாம் சந்தேக வினாக்கள் தன் நெஞ்சிலே சதிராட்டம் ஆட, மை இருளைத் தன் மை விழிகளால் துழாவியவாறே அந்த நான்காவது மனிதரின் முகத்தை நன்கு அடையாளம் கண்டிட முனைந்தாள் முத்துநகை. அதே வேளையில் திடு திடுவென்று குதிரைகளின் குளம்பொலி இந்தப் பூமியை மட்டுமின்றித் தன்செவி மடல்களையும் அதிரவைப் பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய விழிக்கதவு ஒரு முறை மூடித்