பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

407


ரோமாபுரிப் பாண்டியன் 407 திறப்பதற்குள் அடலேறென ஐந்தாறு வீரர்கள் புரவிமீதேறி அவளுக்கு எதிரேயே வந்து விட்டனர்! அவர்களை அழைத்து வந்தவன் யார் என்பதை வீரன் ஒருவனின் கரத்திலிருந்த தீவட்டியின் சோளக்கதிர் போன்ற ஒளிப் பிழம்பு தெளிவாகக் காட்டியது. 1 அந்த ஆற்றல்மறவன் - அரிமா வேறு யாரும் அல்லன்; பெருவழுதிப் பாண்டியனின் பெருநம்பிக்கைக்குப் பாத்திரமான செழியனே! அவன் இப்போது தோற்றமளிப்பதும், தாமரைக்குத் துணையாகப் புகார் அரண்மனைக்குள் புகுந்தானே அந்த வேளிர் குல வீரனாகவா? அல்லவே அல்ல; முன்னொரு சமயம் புலவர் காரிக்கண்ணனார் இல்லத்தில், முத்துநகையிடம் சிகிச்சை பெற்றானே அதே உண்மையான வடிவத்தில்தான் இப்போது அவன் வந்திருந்தான்! அவனுடைய பரந்த முகத்தைப் பார்த்ததுமே முத்துநகையின் நெஞ்சத்திலே புதியதொரு நம்பிக்கையும், தெம்பும் பொங்கிப் புரண்டன கங்குகரையில்லாமல். இனி ஆயிரம் ஆயிரம் 'இருங்கோவேள்' அணிதிரண்டு கரிகாலரைக் கவிழ்க்க வந்தாலும், அவர்களை ஒரே மூச்சில் தீர்த்துக் கட்டிவிடக்கூடிய அளப்பரிய வலிமை தனக்கு வந்துவிட்டதைப்போல் விளக்கவொண்ணாத உணர்ச்சிப் பிழம்பாகவே மாறலானாள் அந்த வீராங்கனை! அவள் ஆயினும், தன்னைச் சுற்றி நிற்கும் மூன்று யவனக் கிழவர்களுள் யார் உண்மையான இருங்கோவேள் என்பதை கண்டு பிடித்திட வேண்டுமே! '"அரசே! என்று குரல் கொடுத்தான் செழியன். முதலில் உடனே, இரண்டாவதாக வந்த யவனக்கிழவர், "கவலைப்படாதே செழியா! -என்றவாறே தமது உரம் வாய்ந்த கரத்தினைத் தலைக்கு மேலே உயர்த்திக் காட்டினார். அவர்தம் விரலில் குடியேறியிருந்த வைரக் கணையாழி செம்பருத்திப் பூவின் செந்நிறத்தை உமிழ்ந்து, 'பளிச், பளிச்' சென்று மின்னிற்று. அவனது மிடுக்கான குரலைக் கொண்டே அவன் கரிகாலன் என்று உணர முடிந்த முத்துநகை, "மன்னவா! தாங்களா?' என்று அதிர்ச்சியுடன் கேட்டாள். "ஆமாம் முத்துநகை, நானேதான்!' என்று முறுவலித்த கரிகாலன், புலவர் காரிக்கண்ணனார் நின்றிருந்த திக்கினை நோக்கினான். 'தாங்கள் ஏன், எப்படி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்? என்று வினவாமல் வினவின அவர் விழிகள்.