408
கலைஞர் மு. கருணாநிதி
408 கலைஞர் மு. கருணாநிதி சோழப் பெருவேந்தனான திருமாவளவனே இங்ஙனம் உருமாறி வரக்கூடும் என்று கற்பனைகூடச் செய்தறியாத காரிக்கண்ணனார் தாம் அடைந்த அதிர்ச்சியினின்றும் மீள்வதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டார். ஆயினும் அவர் சற்று முன்னால் வந்து, "மன்னர் மன்னவா! இங்கே ஒரு கொடிய நிகழ்ச்சி நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதைச் சில விநாடிகளுக்கு முன்னர்தான் தெரிந்து கொண்டேன். அதனை எவ்வாறேனும் தடுத்திட வேண்டும் என்னும் ஆர்வத்துடனேயே ஓடோடி வந்தேன். நான் சொல்வதை நம்புங்கள். மன்னா, என்னுடன் வந்திருக்கிறாரே இந்த யவனக்கிழவர், இவரைப் பற்றிப் பின்னால் விளக்குகிறேன். அதோ நிற்கிறானே, அவன் தான் இருங்கோவேள்... காரிக்கண்ணனார் தம் வார்த்தைகளை முடிக்கும் முன்னரே முதலாவது யவனக்கிழவராக வந்த இருங்கோவேள் 'ஓ.. ஓ' என்று உரத்த குரலில் சிரிக்கத் தொடங்கி விட்டான். அந்தச் சோலைப்பகுதியே அதிர்ந்துபோகும் வண்ணம் எதிரொலியினை எழுப்பிற்று அவனுடைய பெருத்த சிரிப்பு. அவனுக்குப் பைத்தியந்தான் பிடித்துவிட்டதோ என்று எண்ணும்படியாகவும் அது பிசிறு விழுந்து ஒலித்தது! மூளையே சிதறுண்டு, அவனுக்குப் பைத்தியமே பிடித்திருந்தாலும் கூட, அதிலே வியப்புறவோ வேதனைப்படவோ என்னதான் இருக்கிறது? ஓர் உண்மையான வீரனுக்குரிய இலக்கணப்படி எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் புலியாகவா அவன் பொருத முற்பட்டான்? விநாடிக்கு விநாடி வேடம் போட்டு மறைந்து வாழும் பச்சோந்தியாக அல்லவா தன் வேளிர்குலப் பண்பையே காற்றில் பறக்க விட்டான்? ஆயினும், தன்னுடைய திட்டங்கள் அனைத்துமே இத்துணை விரைவில் இடிந்து நொறுங்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. தான் பின்னிய சூதுவலை இரும்பாலானதாக அவன் எண்ணிக் கொண்டிருக்க, அது வெறும் நூலிழையால்கூட ஆனதல்ல என்று அம்பலப்படுத்தப்படும் என்று அவன் நினைக்கவே இல்லை - அவ்வாறு அதனை அறுத்தெறிந்த பெருமையும் செழியனையே சாரும். தன்னுடைய தமக்கை பெருந்தேவி இயற்கை எய்தியதும், மைத்துனனான இருங்கோவேளிடம் செழியனுக்கு ஒருவிதப் பரிவு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். எனினும், கரிகாலனின் உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு இருங்கோவேளின் வஞ்சனைக் கரம் எல்லை கடந்து நீள்கிறது என்றதும், செழியனால் நெஞ்சம் பெறுக்க முடியவில்லை. இமைப் பொழுதைக் கூட வீணடிக்காமல் சோழ மன்னனைச் சந்தித்து எத்தகைய பேராபத்திலே அவர் சிக்கிடப் போகிறார் என்பதனை எடுத்துச் சொன்னான். இருட்டிலே அடையாளங்கண்டு கொள்வதற்காக, அவர் சிவப்புக்கல் கணையாழியை அணிந்து கொண்டு, தம் தலைக்கு