பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

கலைஞர் மு. கருணாநிதி


410 கலைஞர் மு.கருணாநிதி திடுக்கிட்டுப்போய் அவளையும் இருங்கோவேளையும் மாறி மாறி வெறித்து நோக்கினர். அடிபட்டு வீழ்ந்த வேங்கையைப் போல, ஆவி பிரியப் போகும் வேதனை தாளாமல், தன் கனத்த உடலை ஓரிடத்தில் கிடத்திக் கொள்ளவும் முடியாமல், தரையிலே தன் கால்களைப் போட்டு அடியடியென்று அடித்தவாறே துடியாய் துடித்துக் கொண்டிருந்தான் இருங்கோவேள். அவன் அவ்வாறு துடிப்பதைக் காணக் கரிகாலனின் இதயமும் துடிதுடித்தது. பகைவனுக்கும் அருள் புரியும் பண்பாளன் அல்லவா அவன்? அவன் உடலருகே விரைந்தான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் வந்தனர். இருங்கோவேளோ கட்டாரியோடு சேர்த்துச் செங்குருதி ஊற்றாகப் பொங்கி வழியும் தன் மார்பகத்தை ஒரு கையினால் அழுத்திப் பிடித்துக் கொண்டவாறே, இன்னொரு கையினால் தன் முகத்தருகே வந்துவிட்ட கரிகாலனின் கரிய தாள்கள் இரண்டையும் இறுகப் பற்ற முயன்றான். "மன்னர்... மன்னவா! என்னை...மன்னித்து விடுங்கள்" என்னும் வார்த்தைத் துளிகள் அவன் வாயினின்றும் திணறிச் சிதறின. அந்தச் சொற்கள் தம் செவியில் விழுந்ததும் கரிகாலனின் உள்ளம் பாகாய்க் கரைந்து உருகிற்று. அவன் கீழே அமர்ந்து இருங்கோவேளின் தலையைத் தாங்கிப் பிடித்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான். "என்னுடைய எதிரி இருங்கோவேளாக உம்மை இப்போது நான் காணவில்லை; என்னுடைய உயிரைக் காப்பாற்றிய வளவனாகவே நான் காண்கிறேன்; ஆகவே 'மன்னிப்பு' என்கிற பேச்சுக்கு இங்கே இடமேது?" என்று மொழியும்போதே, கரிகாலனின் குரல் தழுதழுத்து விட்டது. கண்ணீர் வெள்ளம் அவன் விழிகளுக்குத் திரையிட்டது. அருவியாகவும் வழிந்தது. புலவர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய 'பட்டினப்பாலை' அரங்கேற்றமும், அந்த இனிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து தன் உயிரைப் பருகுவதற்காகப் பெருந்தேவியிடமிருந்து பாய்ந்து வந்த கட்டாரியும், அதனைத் துணிந்து தாங்கிக்கொண்டு தன்னை இறப்பிலிருந்து மீட்ட வளவனின் தீரச் செயலும் பழைய நினைவுச் சுருள்களாகி, காற்றடிபட்ட கருமுகில்களின் கடுவேகத்தோடு அவனுடைய கண்ணீர்த் திரையிலே மிதந்தோடிடவும் தவற வில்லை. "நான்தான் வள வள வன் என்பதும் தங்களுக்குத் தெரிந்து 'விட்டதா, அரசே? என்று கேட்டுக் கரிகாலனின் நினைவுத் தேரை நிலையடிக்குக் கொணர்ந்திட்டான் இருங்கோவேள்.