பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

411


ரோமாபுரிப் பாண்டியன் 411 "நீர்தான் வளவன் என்பதைச் செழியன் மூலம் நான் அறிந்து கொண்டேன். நீர் மட்டும் உமது நிலைமையைப் புரிந்து கொண்டு குறுக்கு வழிகளை நாடாது இருந்திருந்தால், உம்மை மீண்டும் குறுநில மன்னராகவே ஆக்கியிருப்பேன். சிறிது காலத்திற்கு முன்னே வடபுலத்தில் சீலம் நதிக்கரையை ஆண்ட 'போரசு' மன்னனைக் கிரேக்க மாவீரன் அலெக்சாந்தர் வெற்றிக்கொண்ட போதிலும், அவனை மன் னித்து அவனுக்குரிய மதிப்பினை அளிக்கவில்லையா? அப்படித்தான் நானும் உம்மை நடத்திட எண்ணியிருந்தேன். ஆனால் நீரோ...?" அதற்கெல்லாம் காலங் கடந்துவிட்டது மன்னவா! ஆத்திர...தில் என்...அறிவை இழந்து... விட்டேன்! நான் தங்களுக்கு மட்டும் துரோகி யில்லை.... என் மனைவி பெருந்தேவிக்கும் நான் பெரிய துரோகி! ஆனாலும் நான் நிம்மதியாகத்தான் சாகிறேன். யார் கையால் நான் சாக ஆசைப்பட்டேனோ அவள் கையாலேயே.." "அப்படியானால் முத்துநகைதான்" என்று கரிகாலன் இழுக்கும்போதே, ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் இருங்கோவேள். உடனே காரிக்கண்ணனார்- ஆமாம் அரசே! இருங்கோவேள் கூறுவது முற்றிலும் உண்மை! தான் இறக்கத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, ஆனால் தான் இறந்த பிறகு எனக்குத் தெரிந்தால் போதும் என்று கருதி, அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்கும் முறையில் எழுதி வைத்திருந்த ஓலை நறுக்கு தற்செயலாக எனக்கு முன்கூட்டியே கிடைத்துவிட்டது. அதிலே முத்துநகையைத் தான் விரும்பியதைப் பற்றியும், எனக்கும் இதோ இந்த யவனக் கிழவருக்குமுள்ள தொடர்பைத் தெரிந்துகொண்டு தாமும் யவனக்கிழவர் வேடமணிந்து எல்லாரையும் ஏமாற்றியதைப் பற்றியும், அதன் காரணமாக நான் சிறைப்பட நேர்ந்தது பற்றியும், அதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு-தங்களை கொல்வதற்காகச் சூதுவலை பின்னி இந்தச் சோலைப் பக்கம் வரவழைத்தது பற்றியும், ஆனால் தன்னுடைய மனம் மாறி முத்துநகையின் கையினாலேயே தான் இறக்க விழைவதைப் பற்றியும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார் இருங்கோவேள். அந்த ஓலை நறுக்கைப் பார்த்து விட்டுப் பதறிப்போய்த்தான் இந்த யவனக் கிழவரையும் அழைத்துக் கொண்டு நான் இங்கே ஓடோடியும் வந்தேன்! - என்று படபடப்புடன் சொல்லி முடித்தார். இறப்பின் தழுவலுக்கு இலக்காகப் போகும் இருங்கோவேள் "எனக்கொரு கடைசி ஆசை; நிறைவேற்றுவீர்களா?" என்றான்.