ரோமாபுரிப் பாண்டியன்
415
ரோமாபுரிப் பாண்டியன் 415 பண்பாடு அல்லவா? அந்த பண்பாட்டிலிருந்து நம்மவர்களே சிலர் நழுவலாம்-வழுவலாம்; அதற்காக நாம் வருந்துவதைத் தவிர வேறு வழி யில்லை. இப்பொழுதுங்கூட இருங்கோவேளின் சவ அடக்கத்தினை அரச மரியாதைகளுடன் நடத்திடத்தான் ஆணை பிறப்பிக்கப் போகி றேன். ஆனால் உன்னுடைய எதிர்காலத்தை எண்ணும் பொழுதுதான்" கரிகாலனால் அதற்கு மேல் தொடர முடியாமல் தொண்டையை அடைத்தது; கண்களும் பனித்தன. "என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் மன்னவா! தங்களைப் போன்ற அறிவும் ஆற்றலும் நிரம்பிய - அதே சமயம் பண்பாட்டிலும் தலைசிறந்த ஒரு பேரரசரின் அன்புக்குப் பாத்திரமானதே வாழ்க்கையில் நான் அடைந்த பெரும் பேறு! தங்களுடைய உயிருக்கும் ஆட்சிக்கும் ஊறு வராமல் பணிபுரிவதைவிட எனக்கு வேறு இலட்சியம் குறிக்கோள் -இன்பம் என்ன இருக்கிறது? என்றாலும், மூளையோடு முன்னேற வேண்டியவர்கள் மூட நம்பிக்கைகளுக்குப் பலியாவதைப் போலக் கடமையாற்றிடப் புறப்பட்டுச் சென்ற நான், உடல் உணர்ச்சி களுக்கு அடிமையாகலாமா? ஆணுடை அணிந்து தாமரையை ஏமாற்றி னேன். அதற்குத்தான் அவளுடைய அண்ணன் 'வீரபாண்டி யாக வந்து என்னைப் பழிவாங்கி விட்டார்!" முத்துநகை இவ்வாறு பகர்ந்ததும் "அரசே! இருங்கோவேள் இறந்த செய்தியை உடனே நாம் தாமரைக்கு தெரிவிக்க வேண்டும் அல்லவா?” என்று கேட்டான் செழியன். "ஆமாம், தெரிவிக்கத்தான் வேண்டும். ஆனால் இந்த நள்ளிரவில் உறங்கிக் கொண்டு இருப்பவளை எழுப்பி இந்தச் செய்தியைச் சொன்னால், அவள் அதிர்ச்சியடைந்து அந்த அதிர்ச்சியிலேயே..." என்று தயங்கினான் கரிகாலன். "தாங்கள் நினைப்பதும் சரிதான் அரசே! அவளுடைய அண்ணி இறந்து சில நாட்கள் கூட ஆகவில்லை. அந்த ஆற்றொணாத்துயரமே அவளை வாட்டிக் கொண்டிருக்கும் பொழுது அண்ணனும் இறந்து விட்டான் என்றால் அவளால் எப்படித்தான் தாங்கிட இயலும் அந்த அதிர்ச்சியினை! தன்னுடைய குலமே இப்படிப் பூண்டோடு அழிந்து விட்டதே என்கிற ஏக்கமே அவளுடைய உயிரைக் குடித்து விடாதா? ஆகவே, படிப்படியாக மெள்ள மெள்ள இந்தச் செய்தி அவள் செவியில் விழுமாறு செய்வதுதான் நல்லது. அத்துடன் இந்த நள்ளிரவில் போர் அறத்திற்குப் புறம்பான முறையில் தன் அண்ணனைக் கொன்று விட்டார்களோ என்று தவறாகவும் தங்களைப்பற்றி அவள் எண்ணிடக்கூடும். மேலும், துயிலில் ஆழ்ந்திருக்கும் புகார் நகரத்து மக்கள், திடுக்கிட்டெழுந்து இங்கே திரண்டோடி வருவதால் என்ன