பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

கலைஞர் மு. கருணாநிதி


416 கலைஞர் மு.கருணாநிதி நன்மை ஏற்படப் போகிறது. எனவே, விடிவதற்குள் இருங்கோவேளின் இறப்புச் செய்தியைப் பரப்பி விடாமல் இருப்பதே நல்லதென்று' படுகிறது" என்றார் மூன்றாவது யவனக் கிழவர். அவரது கூற்றும் சரியென்றே பட்டது கரிகாலனுக்கு. "ஆமாம். செழியா! பொழுது புலர்ந்ததும் நானே தாமரையிடம் சென்று நயமான முறையில் அவள் இடிந்து போகா வண்ணம் செய்தியை எடுத்துச் சொல்லித் தேற்றி இங்கே அழைத்து வருகிறேன். நீ இப்பொ ழுதே அரண்மனைக்குச் சென்று மெய்க்காவலரைக் கலந்து கொண்டு, இருங்கோவேளின் இறுதிக் கடனுக்கான ஏற்பாடுகளைக் கவனி. முத்துநகையையும் உடன் அழைத்துச் செல். சோர்ந்து போயிருக்கின்ற அவள் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளட்டும். பனியும் கடுமையாகப் பெய்கிறது. நானும் காரிக்கண்ணனாருடன் சற்றுத் தனியே உரையாட வேண்டியிருக்கிறது" என்றான் கரிகாலன். செழியன் தான் ஏறிவந்த குதிரையுடன் அரண்மனை நோக்கி நடந்தான். முத்துநகையும் துயரத்தின் மொத்த வடிவமாகத் துவளும் கால்களுடன் தளர் நடைபோட்டாள்.